Published : 09 Nov 2025 10:53 AM
Last Updated : 09 Nov 2025 10:53 AM

ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.

41.5 ஓவர்​களில் இந்​திய அணி 103 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. கடைசி விக்​கெட்​டுக்கு வித்​யூத், சந்​தீப் வாரியர் ஜோடி 79 ரன்​கள் சேர்த்​த​தால் 180 ரன்​களை கடக்க முடிந்​தது. ஆந்​திரா அணி சார்​பில் பிரித்வி ராஜ் 4, சவுரப் குமார் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆந்​திரா அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 20 ரன்​கள் சேர்த்​தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x