Published : 08 Nov 2025 10:09 AM
Last Updated : 08 Nov 2025 10:09 AM

ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

பிரிஸ்​பன்: இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5-வது டி 20 கிரிக்​கெட் போட்டி இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு பிரிஸ்​பனில் நடை​பெறுகிறது.

5 ஆட்​டங்​கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்​கெட் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் டி 20 தொடரை 3-1 என்ற கணக்​கில் கைப்​பற்றி கோப்​பையை வெல்​லும். மாறாக ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றால் தொடர் 2-2 என சமனில் முடிவடை​யும். எப்​படி இருப்​பினும் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 17 வருடங்​களாக டி 20 தொடரை பறி​கொடுக்​க​வில்லை என்ற சாதனையை இந்​திய அணி தக்​க​வைத்​துக் கொள்​ளும்.

கோல்டு கோஸ்​டில் நேற்​று​முன்​தினம் நடை​பெற்ற 4-வது போட்​டி​யில் இந்​திய அணி சுழற்​பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்டு ஆஸ்​திரேலிய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு கடும் அழுத்​தம் கொடுத்​திருந்​தது. அக்​சர் படேல், வாஷிங்​டன் சுந்​தர், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் கூட்​டாக 10 ஓவர்​களை வீசி 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தனர். பேட்​டிங்​கில் ஷுப்​மன் கில் 46 ரன்​களை சேர்த்த போதி​லும் 39 பந்​துகளை எதிர்​கொண்​டிருந்​தார். இதே​போன்று சூர்​யகு​மார் யாதவ் அதிரடி​யாக ஆட்​டத்தை தொடங்​கிய போதி​லும் விரை​வாக தனது விக்​கெட்டை பறி​கொடுத்​திருந்​தார்.

தொடர் முடிவடை​யும் தரு​வா​யில் உள்ள நிலை​யில் இவர்​கள் இரு​வரும் கணிச​மான ரன்​களை குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். அபிஷேக் சர்மா மீண்​டும் ஒரு முறை பவர்​பிளே​வில் ஆஸ்​திரேலிய அணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். நடு​வரிசை​யில் திலக் வர்​மா, ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. இதில் திலக் வர்மா கடைசி​யாக விளை​யாடிய 3 ஆட்​டங்​களில் முறையே 0, 29, 5 ரன்​களில் நடையை கட்​டி​யுள்​ளார்.

ஆல்​ர​வுண்​டர்​களாக அக்​சர் படேல், வாஷிங்​டன் சுந்​தர், ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பங்​களிப்பை வழங்கி வரு​கின்​றனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் தொடக்க ஓவர்​களில் ஆஸ்​திரேலிய பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

ஆஸ்​திரேலிய அணி இன்றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்​கும். இதனால் அந்த அணி கூடு​தல் கவனத்​துடன் செயல்​படக்​கூடும். ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்டு முன்​னணி வீரர்​கள் பலர் டி 20 தொடரின் கடைசி பகு​தி​யில் விளை​யா​டாத​தால் ஆஸ்​திரேலிய அணி பலவீன​மாகி உள்​ளது. 4-வது ஆட்​டத்தில் 186 ரன்​கள் குவித்த போதி​லும் தோல்​வியை சந்​தித்த ஆஸ்​திரேலிய அணி, 4-வது ஆட்​டத்​தில் 168 ரன்​கள் இலக்கை எட்​டிப்​பிடிக்க முடி​யாமல் 119 ரன்​களுக்கு சுருண்​டிருந்​தது.

மிட்​செல் மார்​ஷ், டிம் டேவிட், மார்​கஸ் ஸ்டாய்​னிஸ் ஆகியோரை மட்​டுமே பேட்​டிங்​கில் அந்த அணி பிர​தான​மாக நம்பி உள்​ளது. கடந்த ஆட்​டத்​தில் மேத்யூ ஷார்ட் தொடக்க வீர​ராக களமிறங்​கிய நிலை​யில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறி​னார். பந்​து​வீச்​சில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக உள்​ளனர். கடந்த ஆட்​டத்​தில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​றாத பென் டுவார்​ஷு​யிஸ் இன்​றைய ஆட்​டத்​தில் நீக்​கப்​படக்​கூடும். இது நிகழ்ந்​தால் மஹ்லி பியர்ட்​மேன் அறி​முக வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x