Published : 08 Nov 2025 09:59 AM
Last Updated : 08 Nov 2025 09:59 AM

ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அம​ராவதி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்​காவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படை​த்திருந்​தது. சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆந்​திர மாநிலம் கடப்​பாவை சேர்ந்த சுழற்​பந்து வீராங்​க​னை​யான ஸ்ரீசரணி​யும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று ஆந்​திரா திரும்​பிய ஸ்ரீயேசரணிக்கு விஜய​வாடா விமான நிலை​யத்​தில் ரசிகர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீசரணி, முன்​னாள் கேப்​டன் மிதாலி ராஜுடன் இணைந்து முதல்​வர் சந்​திர​பாபு நாயுடுவை சந்​தித்​தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத் தொகையை வழங்​கு​வ​தாக சந்​திர​பாபு நாயுடு அறி​வித்​தார். மேலும், குரூப்-1 அரசு வேலை, சொந்த ஊரான கடப்​பா​வில் வீடு கட்​டிக்​கொள்ள மனை​யும் வழங்​குவ​தாக அறிவித்​தார்.

மகளிர் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பெற்​றிருந்த மகா​ராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிருதி மந்​த​னா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ராதா யாதவ் ஆகியோர் நேற்று அம்​மாநிலத்​தின் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸை நேரில் சந்​தித்து வாழ்த்து பெற்​றனர். அப்​போது அவர்​களுக்கு தலா ரூ.2.25 கோடி பரிசு வழங்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x