Published : 08 Nov 2025 09:49 AM
Last Updated : 08 Nov 2025 09:49 AM

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

பைசலா​பாத்: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் குயிண்​டன் டி காக்​கின் அதிரடி சதத்​தால் தென் ஆப்​பிரிக்கா அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

பைசலா​பாத்​தில் உள்ள இக்​பால் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக சல்​மான் ஆகா 69, முகமது நவாஷ் 59, சைம் அயூப் 53 ரன்​கள் எடுத்​தனர். தென் ஆப்​பிரிக்கா அணி சார்​பில் நந்த்ரே பர்​கர் 4, காபாயோம்ஸி பீட்​டர் 3, கார்​பின் போஷ் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

270 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 40.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தனது 22-வது சதத்தை விளாசிய தொடக்க வீர​ரான குயிண்​டன் டி காக் 119 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 123 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். கேப்​டன் மேத்யூ பிரீட்​ஸ்கே 17 ரன்​கள் சேர்த்​தார்.

முன்​ன​தாக லூஹான் டி பிரிட்​டோரியஸ் 40 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், டோனி டி ஸோர்ஸி 63 பந்​துகளில், 3 சிக்​ஸ்ர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். 8 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்​துள்​ளது.

கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி இதே மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்​கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x