Published : 07 Nov 2025 10:02 AM
Last Updated : 07 Nov 2025 10:02 AM
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷ் ரெய்னாவின் ரூ. 6.64 கோடி மதிப்பிலான சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர்கள் சோனு சூட், ஊர்வசி ரவுதலா, மிமி சக்ரவர்த்தி (முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.) மற்றும் அங்குஷ் ஹஸ்ரா (வங்காள நடிகர்) ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்தது. இவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT