Published : 06 Nov 2025 08:43 AM
Last Updated : 06 Nov 2025 08:43 AM

ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி

கர்ராரா: இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரண​மாக கைவிடப்​பட்​டது. 2-வது ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. ஹோபர்ட்​டில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​தது.

டி20 தொடர் 1-1 என சமநிலை​யில் இருக்​கும் நிலை​யில் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​பகலில் நடை​பெறும் 4-வது ஆட்​டத்​தில் இரு அணி​களும் மீண்​டும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. முதல் இரு போட்​டிகளி​லும் பந்​து​வீச்​சில் அச்​சுறுத்​தல் கொடுத்த ஆஸ்​திரேலிய அணி​யின் ஜோஷ் ஹேசில்​வுட் கடந்த ஆட்​டத்​தில் இருந்து வில​கி​னார். இது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. ஏனெனில் 186 ரன்​களை குவித்​திருந்த போதி​லும் ஆஸ்​திரேலிய அணி​யால் வெற்​றியை வசப்​படுத்​தப்​படுத்த முடி​யாமல் போயி​யிருந்​தது.

இதுஒரு​புறம் இருக்க ஆஷஸ் தொடருக்கு தயா​ராகும் வித​மாக இன்று நடை​பெறும் டி 20 ஆட்​டத்​தி​லும், அடுத்த ஆட்​டத்​தில் இருந்​தும் அதிரடி பேட்​ஸ்​மே​னான டிரா​விஸ் ஹெட் வில​கி​யுள்​ளார். ஆஸ்​திரேலிய அணி​யின் இரு தூண்​களாக கருதப்​படும் ஜோஷ் ஹேசில்​வுட், டிரா​விஸ் ஹெட் ஆகியோர் இல்​லாத​தால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்​னிலை பெறு​வதற்​காக சிறந்த வாய்ப்பு உரு​வாகி உள்​ளது.

இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் தொடரை வெல்​வதற்​கான வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொள்​ளும். ஒரு​வேளை இன்று தோல்​வியை சந்​தித்​தால் கடைசி ஆட்​டத்​தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்​வதற்கோ அல்​லது தொடரை பறி​கொடுக்​காமல் இருப்​ப​தற்கோ போராட வேண்​டிய நிலை ஏற்​படும். 3-வது ஆட்​டத்​தில் வாஷிங்​டன் சுந்​தர் பேட்​டிங்​கில் 23 பந்​துகளில், 49 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்​கு​வகித்​திருந்​தார்.

அதேவேளை​யில் தொடக்க வீர​ரான ஷுப்​மன் கில், இந்த சுற்​றுப்​பயணத்​தில் ஒரு​நாள் போட்டி தொடர் உட்பட 6 ஆட்​டங்​களில் விளை​யாடிய போதி​லும் ஒரு முறை​கூட அரை சதத்தை எட்​ட​வில்​லை. அவர், முறையே 10, 9, 24, 37*, 5, 15 ரன்​களே எடுத்​துள்​ளார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் ஷுப்​மன் கில் ரன்​கள் குவிக்க வேண்​டிய நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறார். மறு​புறம் மற்​றொரு தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா சிறந்த பார்​மில் உள்​ளார். அவரிடம் இருந்து மீண்​டும் ஒரு அதிரடி தொடக்​கம் அமையக்​கூடும். சூர்​யகு​மார் யாத​வும் ரன்​கள் குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் அர்​ஷ்தீப் சிங் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார். அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்ரா விக்​கெட் கைப்​பற்​றா​விட்​டாலும் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​யிருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். சுழலில் அக்​சர் படேல், வருண் சக்​ர​வர்த்​தி, வாஷிங்​டன் சுந்​தர் கூட்​டணி பலம் சேர்க்​கக்​கூடும்.

ஆஸ்​திரேலிய பேட்​டிங்​கில் மிட்​செல் மார்​ஷ், டிம் டேவிட், மார்​கஸ் ஸ்டா​யினிஸ் ஆகியோரை பெரிதும் சார்ந்​திருக்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட் இல்​லாத​தால் மேத்யூ ஷார்ட் தொடக்க வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்​ளது. பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் சீன் அபோட் 3.3 ஓவர்​களில் 56 ரன்​களை தா​ரை​வார்த்​திருந்​தார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அவருக்கு பதிலாக பென் டுவார்​ஷு​யிஸ் அல்​லது மஹ்லி பியர்​ட்​மேன்​ சேர்​க்​கப்​படக்​கூடும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x