Published : 05 Nov 2025 07:06 AM
Last Updated : 05 Nov 2025 07:06 AM
சென்னை: அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில் சிறுமியர்களுக்கான ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் லீக் சுற்று வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெறுகிறது. லீக் சுற்றை தொடர்ந்து 25-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இறுதிப் போட்டி டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் உறைவிட பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முகாம் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள புனித ஜான் பால் அகாடமியில் நாளை (6-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6-ம் தேதி காலை 10 மணிக்கு பயிற்சி முகாமில் இணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT