Published : 05 Nov 2025 07:06 AM
Last Updated : 05 Nov 2025 07:06 AM

மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக்

சென்னை: கர்​நாடக மாநிலம் மங்​களூருவில் மங்​களூரு சேலஞ்ச் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்​றது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ரித்விக் சஞ்​ஜீ​வி, சகநாட்​டைச் சேர்ந்த ரூனக் சவு​கானுடன் மோதி​னார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றார். தமிழகத்​தைச் சேர்ந்த ரித்விக் சஞ்​ஜீவி ஹட்​சன் பாட்​மிண்​டன் அகாட​மி​யில் பயிற்சி பெற்று வரு​கிறார்​.

தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பைசலாபாத்: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சைம் அயூப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 264 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் பேட் செய்யத் தொடங்கியது.

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: அரை இறுதியில் ரைபகினா

சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து கொண்டு இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். செரீனா வில்லியம்ஸ் குரூப்பில் இடம் பெற்றுள்ள 6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா தனது 2-வது ஆட்டத்தில் நேற்று போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இதில் ரைபகினா 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் ரைபகினா அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x