Published : 05 Nov 2025 06:59 AM
Last Updated : 05 Nov 2025 06:59 AM

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்

சென்னை: ​முழங்​கால் காயம் காரண​மாக பிக் பாஷ் லீக்​கில் (பிபிஎல்) இருந்து ரவிச்​சந்​திரன் அஸ்​வின் விலகி உள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் வரும் டிசம்​பர் 14-ம் தேதி ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறும் பிக் பாஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்​டர் அணிக்​காக அறி​முக வீர​ராக களமிறங்க இருந்​தார். இதற்​காக 39 வயதான அவர், சென்​னை​யில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார். எதிர்​பா​ராத​வித​மாக அப்​போது அவருக்கு முழங்​காலில் காயம் ஏற்​பட்​டது. இதற்​காக அறுவை சிகிச்சை செய்​து​ கொண்​டுள்ள அஸ்​வின், காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யும் வகை​யில் பிக் பாஷ் லீக்​கில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x