Published : 04 Nov 2025 12:07 PM
Last Updated : 04 Nov 2025 12:07 PM

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2025 - இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டன்!- அணி விவரம்!

கத்தாரில் நடைபெறவிருக்கும் ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் திர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனுக்குப் பிறகு தனது முதல் டி20 போட்டியை ஹோபார்ட்டில் அன்று ஆடிய 32 வயதான ஜிதேஷ் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்து உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்றதில் பின் கள வீரராக ஜிதேஷ் சர்மா தன் 176% ஸ்ட்ரைக் ரேட்டுடன் அபரிமிதமான பங்களிப்புகளைச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரசிகர்களின் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைபவ் சூரியவன்ஷி 14 வயதில் இந்திய ஏ அணியில் ஆசியக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த 14 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை இம்மாதம் 14 முதல் 23ம் தேதி வரை கத்தாரில் நடைபெறுகிறது. ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பியில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைக்கான இந்தியா ஏ அணி வருமாறு:

பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் திர் (துணை கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்கே, ஜிதேஷ் சர்மா (கேப்டன் - விக்கெட் கீப்பர்) , ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.

ஸ்டாண்ட் பை வீரர்கள்: குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.

நவம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ அணி எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x