Published : 03 Nov 2025 09:26 AM
Last Updated : 03 Nov 2025 09:26 AM

தெ.ஆ. ‘ஏ’ உடன் டெஸ்ட் போட்டி: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!

பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்க ஏ அணி​யுட​னான முதலா​வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய ஏ அணி 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

பெங்​களூரு​வில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி 309 ரன்​களும், இந்​திய ஏ அணி 234 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க ஏ அணி 199 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து இந்​திய ஏ அணி 275 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் இந்​திய ஏ அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 119 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை ஆயுஷ் பதோனி, கேப்​டன் ரிஷப் பந்த் விளையாடினர். பதோனி 34 ரன்​களில் வீழ்ந்​தார். மறு​முனை​யில் கேப்​டன் ரிஷப் பந்த் 113 பந்​துகளில் 90 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார்.

கடைசி ஓவர்​களில் தனுஷ் கோட்​டி​யான் 23, மானவ் சுதர் 20, அன்​ஷுல் காம்​போஜ் 37 ரன்​கள் சேர்த்து இந்​திய அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். 73.1 ஓவர்​களில் இந்​திய ஏ அணி 7 விக்​கெட் இழப்​புக்கு 277 ரன்​கள் சேர்த்து 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x