Published : 02 Nov 2025 12:12 AM
Last Updated : 02 Nov 2025 12:12 AM

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு, சொந்த ஊரான வடுவூரில் நேற்று நடைபெற்ற விழாவில் சால்வை அணிவித்து பாராட்டிய அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.

திருவாரூர்: ஆசிய இளை​யோர் விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய கபடி அணி வீரர் அபினேஷுக்கு வடு​வூரில் நேற்று உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

பஹ்ரைன் நாட்​டில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் கபடிப் போட்​டி​யில் இந்​திய ஆடவர் மற்​றும் மகளிர் அணி​கள் தங்​கம் வென்​றன. இந்​திய ஆடவர் அணி​யில், திரு​வாரூர் மாவட்​டம் வடு​வூர் கிராமத்​தைச் சேர்ந்த அபினேஷ்(17) இடம் பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில், சொந்த ஊரான வடு​வூருக்கு நேற்று வந்த அபினேஷுக்கு நேற்று உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. திறந்த வேனில் அபினேஷை ஏற்றி வந்​து, வழிநெடு​கிலும் பொது​மக்​கள் சால்​வை, மாலைகள் அணி​வித்து தங்​களது மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர்.

வரவேற்பு நிகழ்​வில் அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா பங்​கேற்​று, அபினேஷுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். தொடர்ந்​து, வடு​வூர் உள் விளை​யாட்டு அரங்​கில் பாராட்டு விழா நடை​பெற்​றது. திரு​வாரூர் மாவட்ட அமெச்​சூர் கபடிக் கழகச் செய​லா​ளர்ராஜ​ராஜேந்​திரன், வடு​வூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி செய​லா​ளர் சாமி​நாதன் மற்​றும் பொது​மக்​கள் அபினேஷுக்​குப் பாராட்​டுத் தெரி​வித்​தனர். அப்​போது, தனது பயிற்​சி​யாளர்​கள் மற்​றும் ரூ.25 லட்​சம் நிதி​யுதவி வழங்​கிய தமிழக முதல்​வர், துணை முதல்​வருக்கு அபினேஷ் நன்றி தெரி​வித்​தார்.

அபினேஷின் சிறு​வய​திலேயே தந்தை மோகன்​தாஸ் உயி​ரிழந்​து​விட்​டார். தாயார் தனலட்​சுமி மற்​றும் 2 சகோ​தரி​கள் உள்​ளனர். 7-ம் வகுப்பு வரை வடு​வூரில் உள்ள அரசு உதவி​பெறும்பள்​ளி​யில் பயின்ற அபினேஷ், பின்னர் தேனி​யில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய விளை​யாட்​டுப் பள்​ளி​யில் படித்​தார். தற்​போது வேல்​ஸ் பல்​கலை.​யில் இளநிலை முதலா​மாண்டு பட்​டப் படிப்​பு படித்​து வரு​கிறார்​.ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு, சொந்த ஊரான வடுவூரில் நேற்று நடைபெற்ற விழாவில் சால்வை அணிவித்து பாராட்டிய அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x