Published : 01 Nov 2025 10:40 AM
Last Updated : 01 Nov 2025 10:40 AM

ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள்

மெல்​பர்ன்: ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த இளம் வீரர் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்து சர்​வ​தேச 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​யினர் கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடினர்.

இந்​தப் போட்டி மெல்​பர்ன் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. மெல்​பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்​ வீர​ரான பென் ஆஸ்​டின் என்​பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்​கெட் கிளப்பில் வலைப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அப்​போது அவரது கழுத்​துப் பகு​தி​யில் பந்து அதிவேக​மாகத் தாக்​கியது. இதில் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். 2 நாள் தீவிர சிகிச்சை அளித்​தும் அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-வது டி20 போட்​டி​யின்​ போது பென் ஆஸ்​டின் மறைவுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக​வும், அவரது குடும்​பத்​தினருக்​குத் தங்​களது இரங்​கலைத் தெரிவிக்​கும் வகை​யிலும் ஆஸ்​திரேலி​யா, இந்​திய அணி​களைச் சேர்ந்த வீரர்​கள் கையில் கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x