Published : 01 Nov 2025 10:20 AM
Last Updated : 01 Nov 2025 10:20 AM

ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெற்றி

சார்ப்ருக்கென்: ஜெர்​மனி​யில் நடை​பெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் தொடரின் மகளிர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் இந்​திய வீராங்​கனை உன்​னதி ஹூடா வெற்றி கண்டு அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

ஜெர்​மனி​யின் சார்ப்​ருக்​கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் கால் இறு​திப் போட்​டி​யில் உன்​னதி ஹூடா 22-20, 21-13 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சீன தைபே வீராங்​கனை லின் சியாங் டியை வீழ்த்​தி​னார். இதன்​மூலம் அரை இறு​திச் சுற்​றுக்கு அவர் முன்​னேறி​யுள்​ளார்.

ஆடவர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் அயர்​லாந்து வீரர் நகாட் நுகெயன் 21-17, 14-21, 21-15 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​திய வீரர் லக்​சயா சென்னை வீழ்த்​தி​னார். மற்​றொரு ஆடவர் கால் இறு​திப் போட்​டி​யில் பின்​லாந்து வீரர் காலே கோலிஜோனன் 19-21, 21-12, 22-20 என்ற கணக்​கில் இந்​திய வீரர் ஆயுஷ் ஷெட்​டியைத் தோற்​கடித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x