Published : 31 Oct 2025 07:00 AM
Last Updated : 31 Oct 2025 07:00 AM
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் டோனா வெகிக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சகஜா யாமலபன்னியை வீழ்த்தி கால் இறுதி கற்றில் கால்பதித்தார்.
ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவா, ஸ்டிரோம் ஹென்டர் மோதிய ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா ரோடினோவா 1-6, 6-4, 7-6 (10-9) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
நடப்பு சாம்பியனான செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜானிஸ் யுஜெனை எதிர்த்து விளையாடிணர். 2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT