Published : 30 Oct 2025 07:43 AM
Last Updated : 30 Oct 2025 07:43 AM

கனடா ஓபன் ஸ்கு​வாஷ்: அரை இறு​தி​யில் அனஹத்

டொராண்டோ: கனடா​வில் உள்ள டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 43-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், நடப்பு சாம்​பியனும் உலகத் தரவரிசை​யில் 7-வது இடமும் வகிக்​கும் பெல்​ஜி​யத்​தின் டின்னே கிலிஸுடன் மோதி​னார்.

36 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் அனஹத் சிங் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​தி​க்கு முன்​னேறி​னார். தரவரிசை​யில் முதல் 10 இடங்​களுக்​குள் உள்ள வீராங்​க​னையை அனஹத் சிங் வீழ்த்​து​வது இதுவே முதன்​முறை​யாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x