Published : 30 Oct 2025 07:24 AM
Last Updated : 30 Oct 2025 07:24 AM

ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென்

சார்ப்ருக்கென்: ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் கிறிஸ்டோ போபோவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் லக்‌ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த சங்கர் முத்துசாமியுடன் மோதுகிறார். சங்கர் முத்துசாமி முதல் சுற்றில் 21-14, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுன் ஹாவ் லியோங்கை வீழ்த்தினார். அதேவேளையில் இந்தியாவின் முன்னணி வீரரான கிடாம்பி காந்த் 19-21,11-21 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த கிரண் ஜார்ஜிடம் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x