Published : 28 Oct 2025 09:16 AM
Last Updated : 28 Oct 2025 09:16 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் ரத்து

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து ஆடு​களங்​களி​லும் தண்​ணீர் தேங்​கியது. இதன் காரண​மாக முதல் நாளில் நடை​பெற இருந்த அனைத்து ஆட்​டங்​களும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

2-வது நாளான இன்று ஒற்​றையர் பிரி​வில் முதல் சுற்று ஆட்​டங்​கள் அனைத்​தும் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி இன்று 16 ஆட்​டங்கள் நடை​பெறுகின்​றன. பகல் 12 மணிக்கு போட்​டிகளை தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இரட்​டையர் பிரிவு ஆட்​டங்​கள் நாளை (29-ம் தேதி) தொடங்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பிர​தான ஆடு​களத்​தில் நடை​பெறும் ஆட்​டங்​களில் போட்​டித் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள துருக்​கி​யின் ஜெய்​னெப் சோன்​மெஸ், ரஷ்​யா​வின் தாத்​யானா ப்ரோசோரோ​வாவுடன் மோதுகிறார். தொடர்ந்து ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற குரோஷி​யா​வின் டோனா வெகிக், இந்​தி​யா​வின் வைஷ்ணவி அட்​கரை எதிர்​கொள்​கிறார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​களான மாயா ராஜேஷ்வரன் ரேவ​தி, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி நேருக்கு நேர் பலப்​பரீட்சை நடத்​துகின்​றனர். நடப்பு சாம்​பிய​னான செக் குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோ​வா, பிரான்​சின் ஆஸ்ட்​ரிட் லூ யான் ஃபூனுடன் மோதுகிறார்.

போட்​டித் தரவரிசை​யில் 2-வது இடத்​தில் உள்ள கிரேட் பிரிட்​டனின் பிரான்​செஸ்கா ஜோன்​ஸ், ஜப்​பானின் யமகுச்​சியை எதிர்​கொள்​கிறார். இந்​தி​யா​வின் சகஜா யமலபள்​ளி, இந்​தோ​னேஷி​யா​வின் பிரிஸ்கா நுக்​ரோஹோவுடன் மோதுகிறார். இந்த ஆட்டங்கள் முதல் மைதானத்தில் நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x