Published : 28 Oct 2025 09:09 AM
Last Updated : 28 Oct 2025 09:09 AM

மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை

சிட்னி: இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 25-ம் தேதி சிட்​னி​யில் நடை​பெற்​றது.

இந்​தப் போட்​டி​யில் ஃபீல்​டிங் செய்​த​போது ஆஸ்​திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிச் சென்று பிடித்​தார் இந்​திய அணி​யின் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான ஸ்ரேயஸ் ஐயர். அப்​போது கீழே விழுந்​த​தில் அவருக்கு விலா எலும்​பில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர், மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு நேற்று முன்​தினம் அவர் தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். ஸ்கேன் செய்து பார்த்​த​தில் ஸ்ரேயஸ் ஐயருக்கு மண்​ணீரலில் காயம் ஏற்​பட்​டது தெரிய​வந்​தது. அந்​தக் காயத்தை சரி செய்​வதற்​கான சிகிச்சை தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக பிசிசிஐ மருத்​து​வர்​கள் குழு​வினர் தெரி​வித்​தனர்.

கடந்த 2 நாட்​களாக தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் நேற்று தனி வார்​டுக்கு மாற்​றப்​பட்​டார். அவர், வேக​மாக உடல்​நலம் தேறி வரு​வ​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x