Published : 28 Oct 2025 08:48 AM
Last Updated : 28 Oct 2025 08:48 AM

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியாவின் பிரதிகா ராவல் விலகல்

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - வங்​கதேசம் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 21-வது ஓவரில் பீல்​டிங்​கின் போது இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவலுக்கு முழங்​கால் மற்​றும் கணுக்​கால் பகு​தி​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்து களத்​தில் இருந்து வெளி​யேறிய அவர், அதன் பின்​னர் திரும்​பிவர​வில்​லை. ஸ்கேன் பரிசோதனை​யில் பிர​திகா ராவலுக்கு பலத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது தெரியவந்​துள்​ளது. இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

25 வயதான பிர​திகா ராவல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பேட்​டிங்​கில் சிறந்த பார்​மில் இருந்​தார். 6 ஆட்​டங்​களில் அவர், 51.33 சராசரி​யுடன் 308 ரன்​கள் சேர்த்​திருந்​தார்.

நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக சதம் விளாசி​யிருந்​தார். மேலும் மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் ஆயிரம் ரன்​களை விரை​வாக குவித்​தவர்​களின் பட்​டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்​டிருந்​தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி அரை இறுதி ஆட்​டத்​தில் வரும் 30-ம் தேதி நடப்பு சாம்​பிய​னான ஆஸ்திரேலி​யா​வுடன் மோத உள்​ளது. இந்​நிலை​யில் பிர​திகா ராவல் வில​கி​யிருப்​பது இந்​திய அணிக்கு பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

ஏற்​கெனவே விக்​கெட் கீப்​ப​ரான ரிச்சா கோஷ், விரலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக வங்​கதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் களமிறங்​க​வில்​லை. தற்​போது பிர​திகா ராவல் முக்​கிய​மான கட்​டத்​தில் விலக நேரிட்​டுள்​ளது. இந்நிலையில் பிரதிகா ராவலுக்கு பதிலாக ஷபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x