Published : 27 Oct 2025 10:22 AM
Last Updated : 27 Oct 2025 10:22 AM

இங்கிலாந்து மகளிர் அணி அபாரம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

விசாகப்பட்டினம்: உல​கக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்​கடித்​தது.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்டி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 38.2 ஓவர்​கலில் 168 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக ஜார்ஜி பிளிம்​மர் 43 ரன்​கள் எடுத்​தார். இங்​கிலாந்து தரப்​பில் லின்சே ஸ்மித் 3 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

பின்​னர் விளை​யாடிய இங்​கிலாந்து அணி 29.2 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 172 ரன்​கள் சேர்த்து வெற்றி வாகை சூடியது. ஆமி ஜோன்ஸ் 86, டாமி பியூ​மான்ட் 40, ஹீதர் நைட் 33 ரன்​கள் சேர்த்து அணியை வெற்றி பெறச்​ செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x