Published : 27 Oct 2025 09:31 AM
Last Updated : 27 Oct 2025 09:31 AM

ஆசிய பாட்மிண்டன்: ஷைனா, தீக்சாவுக்கு தங்க பதக்கம்

செங்டு: ஆசிய 17 வயதுக்​குட்​பட்​டோர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஷைனா மணி​முத்​து, தீக்சா சுதாகர் ஆகியோர் தங்​கம் வென்​றனர்.

சீனா​வின் செங்டு நகரில் இந்த பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. நேற்று நடை​பெற்ற 15 வயதுக்​குட்​பட்​டோர் மகளிர் பிரிவு இறு​திச் சுற்​றில் இந்​திய வீராங்​கனை ஷைனா மணி​முத்​து, ஜப்​பானின் சிஹாரு டோமி​டாவுடன் மோதி​னார்.

இதில் ஷைனா 21-14, 22-20 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். 17 வயதுக்​குட்​பட்​டோர் மகளிர் பிரிவு இறு​திச் சுற்​றில் இந்​தி​யா​வின் தீக்சா சுதாகர் 21-16, 21-9 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த லக்சயா ராஜேஷை வீழ்த்தி தங்​கம் வென்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x