Published : 27 Oct 2025 09:11 AM
Last Updated : 27 Oct 2025 09:11 AM

டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி

மெல்பர்ன்: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய டி20 அணி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடியது. இதில் ஆஸ்​திரேலியா 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது.

இதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி முதல் 5 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் விளை​யாட உள்​ளன.

இந்​நிலை​யில் சர்​வ​தேச டி20 தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இளம் வீரர்​களை கொண்ட இந்​திய அணி ஆஸ்​திரேலி​யா சென்றடைந்​துள்​ளது. இந்​திய அணி​யில் இடம்​பெற்​றுள்ள கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பும்​ரா, திலக் வர்​மா, ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்​மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளனர்.

ஒரு​நாள் தொடரில் இடம்​பெற்​றுள்ள சில வீரர்​களும், இந்​திய டி20 அணி​யில் இணைந்து கொள்ள உள்​ளனர். டி20 போட்​டிக்​கான இந்​திய அணி​யில் இடம்​பெறாத ரோஹித் சர்​மா, விராட் கோலி உள்​ளிட்ட வீரர்​கள் விரை​வில் தாயகம் திரும்​ப உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x