Published : 26 Oct 2025 10:46 AM
Last Updated : 26 Oct 2025 10:46 AM

ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அர்ஜுன் சர்மா, மோஹித் சாதனை

தின்​சுகியா: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள அசாம் - சர்​வீசஸ் அணி​கள் இடையி​லான ஆட்​டம் நேற்று அசாமில் உள்ள தின்​சுகியா நகரில் தொடங்​கியது. முதலில் பேட் செய்த அசாம் அணி 17.2 ஓவர்​களில் 103 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரத்​யுன் சைகியா 52, ரியான் பராக் 36 ரன்​கள் சேர்த்​தனர்.

சர்​வீசஸ் அணி சார்​பில் மோஹித் ஜங்க்​ரா, அர்​ஜுன் சர்மா ஆகியோர் ஹாட்ரிக் விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தினர். அர்​ஜுன் சர்மா வீசிய 12-வது ஓவரின் 3-வது பந்​தில் ரியான் பராக் ஆட்​ட​மிழந்​தார். அதன் பின்​னர் அடுத்​தடுத்த பந்​துகளில் சுமித் காடிகோன்​கர், சிப்​சங்​கர் ராய் ஆகியோரை வெளி​யேற்றி ஹாட்​ரிக் சாதனை படைத்​தார். அர்​ஜுன் சர்மா 6.1 ஓவர்​களை வீசி 46 ரன்​களை விட்​டுக்​கொடுத்து ஹாட்​ரிக்​குடன் மொத்​தம் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

மோஹித் ஜங்க்ரா 15-வது ஓவரின் கடைசி பந்​தில் பிரத்​யுன் சைகி​யாவை (52) அவுட்​டாக்​கி​னார். தொடர்ந்து 17-வது ஓவரை வீசிய ஜங்க்ரா முதல் 2 பந்​துகளில் முக்​தார் உசேன் (1), பார்​கப் லக்​கர் (0) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பி ஹாட்​ரிக் சாதனை நிகழ்த்​தி​னார். 4 ஓவர்​களை வீசிய அவர், 2 மெய்​டன்​களு​டன் 5 ரன்​களை விட்​டுக்​கொடுத்து ஹாட்​ரிக் விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் வரலாற்​றில் ஒரு இன்​னிங்​ஸில் இரு பந்து வீச்​சாளர்​கள் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​து​வது இதுவே முதன்​முறை​யாகும்.

இதையடுத்து விளை​யாடிய சர்​வீசஸ் அணி 29.2 ஓவர்​களில் 108 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக இர்​பான் கான் 51, ஷிவம் குமார் 16 ரன்​கள் எடுத்​தனர். அசாம் அணி தரப்​பில் ரியான் பராக் 5, ராகுல் சிங் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்​கள். 5 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அசாம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 21 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 56 ரன்​கள் எடுத்​தது. ஆகாஷ் செங்​குப்தா 5, பிரத்​யுன் சைகியா 0, பர்​வேஜ் முஷாரஃப் 1, தினேஷ் தாஸ் 10, ரியான் பராக் 12 ரன்​களில் நடையை கட்​டினர். சுமித் காடிகோன்​கர் 17, சிப்​சங்​கர் ராய் 6 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

முதல் நாள் ஆட்​டத்​தில் மட்​டும் 25 விக்​கெட்​கள் சரிந்​துள்​ளன. கைவசம் 5 விக்​கெட்​கள் வைத்​துள்ள அசாம் அணி 51 ரன்​கள் முன்​னிலை​யுடன்​ இன்​று 2-வது நாள்​ ஆட்​டத்தை விளையாட உள்ளது.

தமிழ்​நாடு ரன் வேட்டை: தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 399 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான விமல் குமார் 224 பந்​துகளில், 28 பவுண்​டரி​களு​டன் 189 ரன்​கள் குவித்து ரோனித் மோர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ஆதிஷ் 14 ரன்​களில் ஒடிலெம்பா கிச்சு பந்​தில் வெளி​யேறி​னார். பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 252 பந்​துகளில், 19 பவுண்​டரி​களு​டன் 156 ரன்​களும், ஆந்த்ரே சித்​தார்த் 30 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x