Published : 25 Oct 2025 12:34 PM
Last Updated : 25 Oct 2025 12:34 PM
சிட்னியில் இன்று நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. டாஸைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லை. இந்தப் போட்டியையும் சேர்த்து தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோற்றுள்ளது.
டாஸில் தோல்விகள் அடைந்திருந்தாலும் சிட்னியை விட்டுப் பார்த்தால் 17 போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது.
ஆகஸ்ட் 2024- 2ம் தேதி கொழும்புவில் இலங்கைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டிதான் டை ஆனது. அந்த ஒருநாள்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் அந்த ஒருநாள் போட்டி இரு அணிகளும் 230 ரன்கள் எடுக்க ‘டை’ ஆனது.
அதாவது இலங்கை அணி 230/8 என்ற ஸ்கோரை எட்ட, இந்திய அணி 48வது ஓவர் முடிவில் 226/8 என்று இருந்தது. சிவம் துபே, சிராஜ் கிரீசில் இருந்தனர். 49வது ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அசலங்கா முதல் 2 பந்துகளை டாட் பால்களாக வீச அடுத்த பந்தை கவர் திசையில் பவுண்டரி விளாசினார் துபே, இந்திய வீரர்கள் குஷியில் குதி குதி என்று குதித்தனர்.
4வது பந்து சிவம் துபேயின் கால்காப்பைத் தாக்க இலங்கை முறையீடு எழுப்ப நடுவர் அவுட் தரவில்லை, ஒரு ரன்னையும் அவர்கள் லெக் பை மூலம் எடுத்து வெற்றி என்றே நினைத்தோம், ஆனால் இலங்கை டிவி நடுவரிடம் முறையிட அது பிளம்ப் எல்.பி.என்று அவுட் தீர்ப்பளிக்கப்பட ஸ்கோர் 230/9 என்று டை ஆகவே இருந்தது. அடுத்து இறங்கிய அர்ஸ்தீப் சிங் ஒரு சுத்து சுத்தினார் பந்து சிக்காமல் கால்காப்பில் தாக்கியது நடுவர் கையை உயர்த்த போட்டி டை ஆனது.
இந்த டாஸ் தோல்வி ஆரம்பித்தது 19 நவம்பர் 2023-ம் ஆண்டு அகமதாபாத்தில் அதுவும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே. இது ரோஹித் சர்மா கேப்டன்சியில்தான். இந்திய அணி 240 ரன்களையே எடுக்க ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 137 ரன்களை விளாச ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.
இந்த துயரம் துடைத்தெறியப்படுவதற்குள் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் டிசம்பர் 19, 2023-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாசில் தோற்றார் கேப்டன் கே.எல்.ராகுல் இந்திய அணி 211 ரன்களையே எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி டோனி டி சார்சியின் 119 ரன்களுடன் 215/2 என்று அபார வெற்றி பெற்றது. பிறகு 2024 இலங்கை அணிக்கு எதிரான டாஸ் தோல்வி போட்டி டை ஆகிறது.
மீண்டும் அதே 19-ம் தேதி அக்டோபர் 2025-ல் பெர்த்தில் டாசில் தோற்றது இந்தியா போட்டியையும் தோற்றது. இன்றுடன் சேர்த்து 18 போட்டிகளில் டாஸ் தோற்று எதிர்மறைச் சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி.
பொதுவாக டாஸ் துரதிர்ஷ்டவசமாக இருந்தால், வேறொரு வீரரை, அல்லது வைஸ் கேப்டனை பூவா தலையாவுக்கு அனுப்புவார்கள், அதிர்ஷ்டம் மாற வாய்ப்புண்டா என்று பார்க்கப்படுவதுண்டு. இப்போது அப்படியெல்லாம் எந்த கேப்டனும் செய்வதில்லை. ஒருமுறை தோனி முயற்சி செய்து பார்த்தார். ஒரு முறை இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஃபாப் டு ப்ளிசிஸ் லக்கை பரிசோதிக்க தெம்பா பவுமாவை டாஸ் போட அனுப்பினார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அப்போதும் விடவில்லை. விராட் கோலி டாஸில் 3வது முறையாக அந்தத் தொடரில் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT