Published : 25 Oct 2025 10:30 AM
Last Updated : 25 Oct 2025 10:30 AM

கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம்

சென்னை: தொழில்​முறை ரீதியிலான கிக் பாக்​ஸிங் சூப்​பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்​தில் உள்ள கலைஞர் குத்​துச்​சண்டை அகாட​மி​யில் நேற்று தொடங்​கிறது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை தமிழ்​நாடு அமெச்​சூர் கிக் பாக்​ஸிங் சங்​கம் நடத்​துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்​ஸ், டிஆர்ஏ டேஷர்​ஸ், சேலம் சூப்​பர் ஸ்டார்​ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்​ஸ், அதிசய சென்னை டைட்​டன்ஸ் ஆகிய 5 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.

ஒவ்​வொரு அணி​யிலும் 12 வீரர், வீராங்​க​னை​கள் என மொத்​தம் 60 பேர் இடம் பெற்​றுள்​ளனர். 12 எடை பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. ஒரு ஆட்​டத்​தில் வெற்றி பெறு​பவருக்கு 2 புள்​ளி​கள் வழங்​கப்​படும்.

ஒட்​டுமொத்​த​மாக ஒவ்​வொரு அணி​களும் பெறும் புள்​ளி​களின் அடிப்​படை​யில் முதல் 3 இடங்​களை பிடிக்​கும் அணி​களுக்கு தங்​கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x