Published : 25 Oct 2025 10:22 AM
Last Updated : 25 Oct 2025 10:22 AM

சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்​பர் 2-ம் தேதி வரை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் இன்று தொடங்​கு​கின்​றன. இதில் 16 வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இதில் இருந்து 4 வீராங்​க​னை​கள் பிர​தான சுற்​றுக்கு தகுதி பெறு​வார்​கள்.

தகுதி சுற்​றில் இந்​தி​யா​வில் இருந்து அங்​கிதா ரெய்​னா, ரியா பாட்​டி​யா, வைஷ்ணவி அட்​கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்​கேற்​கின்​றர். அங்​கிதா ரெய்​னா, ஜப்​பானின் மெய் யமகுச்​சி​யுடன் மோதுகிறார். ரியா பாட்​டி​யா, ஜெர்​மனி​யின் கரோலின் வெர்​னர்​ஜெருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். வைஷ்ணவி அட்​கர், ஜப்​பானின் மெய் ஹோன்​ட​மாவுட​னும் தியா ரமேஷ், ஆஸ்​திரேலி​யா​வின் அரினா ரோடினோ​வாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றனர்.

தகுதி சுற்​றில் ஜப்​பானின் நவோ ஹிபினோவுக்கு தரவரிசை​யில் முதலிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அவர், தாய்லாந்தின் தசபோர்ன் நக்லோவுடன் மோதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x