Published : 25 Oct 2025 10:13 AM
Last Updated : 25 Oct 2025 10:13 AM

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா

டோக்​கியோ: ஜப்​பானின் டோக்​கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, கனடா​வின் விக்​டோரியா எம்​போகோவுடன் மோதி​னார். இதில் ரைபகினா 6-3, 7-6 (4) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

2022-ம் ஆண்டு விம்​பிள்​டன் சாம்​பிய​னான ரைபகி​னா, அரை இறுதி சுற்​றில் செக் குடியரசின் லின்டா நோஸ்​கோ​வாவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். பான் பசிபிக் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறியதன் மூலம் உலகத் தரவரிசை​யில் 8-வது இடத்​துக்கு முன்​னேறி அடுத்த மாதம் சவுதி அரேபி​யா​வில் நடை​பெற உள்ள டபிள்​யூடிஏ பைனல்ஸ் தொடரில் கலந்​து​கொள்​வதற்கு கடைசி வீராங்​க​னை​யாக தகுதி பெற்​றுள்​ளார் எலெனா ரைபகினா.

இந்​தத் தொடரில் உலகத் தரவரிசை​யில் முதல் 8 இடங்​களில் உள்ள வீராங்​க​னை​கள் பலப்​பரீட்சை நடத்​து​வார்​கள். அந்த வகை​யில் அரினா சபலென்​கா, இகா ஸ்வி​யாடெக், கோ கோ காஃப், அமன்டா அனிசிமோ​வா, மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா, ஜாஸ்​மின் பவுலினி ஆகியோர் கலந்து கொள்​ளும் இந்த போட்​டி​யில் தற்​போது எலெனா ரைபகி​னா​வும்​ இணைந்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x