Published : 22 Oct 2025 10:12 AM
Last Updated : 22 Oct 2025 10:12 AM
சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து 86 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மானவ் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்), தினேஷ் (டிரிப்பிள் ஜம்ப்), தமிழ் அரசு (4X100 மீட்டர் ரிலே), சரண் (4X100 மீட்டர் ரிலே) ஆகியோரும் மகளிர் பிரிவில் ஒலிம்பா ஸ்டாபி (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 4X100 மீட்டர் ரிலே), நந்தினி (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), கோபிகா (உயரம் தாண்டுதல்), பவானி யாதவ் (டிரிப்பிள் ஜம்ப்), சுபா தர்ஷினி (4X100 மீட்டர் ரிலே) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT