Published : 22 Oct 2025 09:40 AM
Last Updated : 22 Oct 2025 09:40 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்​பர் 2 வரை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறுகிறது.

இந்​தத் தொடரின் ஒற்​றையர் பிரி​வில் கலந்து கொள்​வதற்கு இந்​திய வீராங்​க​னை​களான மாயா ராஜேஷ்வரன் ரேவ​தி, சஹஜா யாமலபள்​ளி, சுலோவேக்​கி​யா​வின் மியா போகன் கோவா, பிரான்​ஸின் லூயிஸ் போய்​சன் ஆகியோ​ருக்கு வைல்டு கார்டு வழங்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இதில், லூயிஸ் போய்​சன் முழங்​காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக விலகி உள்​ளார். இதனால் அவருக்கு பதிலாக இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமி​திப​திக்கு வைல்டு கார்டு வழங்​கப்​பட்​டுள்​ளது. 23 வயதான அவர், உலகத் தரவரிசை​யில் 377-வது இடத்​தில்​ உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x