Published : 22 Oct 2025 09:36 AM
Last Updated : 22 Oct 2025 09:36 AM
புதுடெல்லி: காயத்தில் இருந்து குணமடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தார். இதனால் அவர், ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 30-ம் தேதி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெறுகிறது.
2-வது டெஸ்ட் நவம்பர் 6-ம் தேதி இதே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இரு போட்டிகளும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராவதற்கு ரிஷப் பந்த்துக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நவம்பர் 14-ல் கொல்கத்தாவில் தொடங்குகிறது.
முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன், ஆயுஷ் பதோனி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்குர், சரன்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.
2-வது போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT