Published : 20 Oct 2025 08:51 AM
Last Updated : 20 Oct 2025 08:51 AM

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

பெர்த்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றுள்​ளது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட தொடரில் ஆஸ்​திரேலிய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது ஒரு​நாள் போட்டி பெர்த் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்​திய அணி முதலில் விளை​யாடி 26 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 136 ரன்​கள் எடுத்​தது. மழை​யின் காரண​மாக ஆட்​டம் 26 ஓவர்​களாகக் குறைக்​கப்​பட்​டது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ரோஹித் சர்​மா​வும், ஷுப்​மன் கில்​லும் களமிறங்​கினர்.

சுமார் 7 மாதங்​களுக்​குப் பிறகு ஒரு​நாள் போட்​டி​யில் களமிறங்​கிய முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா, ரசிகர்​களை ஏமாற்​றி​னார். 14 பந்​துகளில் ஒரு பவுண்​டரி​யுடன் 8 ரன்​கள் சேர்த்த நிலை​யில் அவர் வீழ்ந்​தார்.

ஹேசில்​வுட் பந்​து​வீச்​சில், மேட் ரென்​ஷா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் விளை​யாட வந்த விராட் கோலி​யும் ரன் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து ரசிகர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார். 8 பந்​துகளைச் சந்​தித்த அவர், மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் கூப்​பர் கானொலி​யிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில்​லுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்​தார். இந்த ஜோடி​யும் நீண்ட நேரம் நிலைக்​க​வில்​லை. நிதான​மாக ஆடிக்​கொண்​டிருந்த கேப்​டன் கில்​லை, நேதன் எல்​லிஸ் ஆட்​ட​மிழக்​கச்​ செய்​தார். 18 பந்​துகளில் 2 பவுண்​டரி​களு​டன் அவர் 10 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தார்.

ரன்​கள் சேர்க்க முற்​பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்​துகளில 11 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்​.​ராகுலும், அக்​சர் படேலும் ஸ்கோரை உயர்த்த முயன்​றனர். அக்​சர் 38 பந்​துகளில் 31 ரன்​கள் சேர்த்த நிலை​யில், குனேமன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் மட்​டும் சற்று அதிரடி​யாக விளை​யாடி 31 பந்​துகளில் 2 சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்​தார்.

பின்​னர் வந்​தவர்​களில் வாஷிங்​டன் சுந்​தர் 10, ஹர்​ஷித் ராணா ஒரு ரன்​கள் எடுத்​தனர். கடைசி நேரத்​தில் அதிரடி​யாக விளை​யாடிய நித்​திஷ் ரெட்டி 11 பந்​துகளில் 19 ரன்​கள் (2 சிக்​ஸர்​கள்) எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

மழை​யின் குறுக்​கீடு காரண​மாக ஆடு​களம் இந்​திய வீரர்​களுக்கு ஒத்​துழைக்​க​வில்​லை. ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஓவன், குனேமன், ஹேசில்​வுட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை எடுத்​தனர். நேதன் எல்​லிஸ், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். மழை​யின் குறுக்​கீடு காரண​மாக டிஎல்​எஸ் முறைப்​படி ஆஸ்​திரேலி​யா​வுக்கு வெற்றி இலக்கு 26 ஓவர்​களில் 131 ரன்​கள் என்று நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக மிட்​செல் மார்​ஷும், டிரா​விஸ் ஹெட்​டும் களமிறங்​கினர். அதிரடி​யாக விளை​யாட முற்​பட்ட டிரா​விஸ் ஹெட் 8 ரன்​களில், அர்​ஷ்தீப் பந்​தில் ஹர்​ஷித் ராணா​விடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த மேத்யூ ஷார்ட் 17 பந்​துகளில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் பந்​தில் ரோஹித்​திடம் பிடி​கொடுத்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் மார்​ஷும், ஜோஷ் பிலிப்​பும் சிறப்​பாக விளை​யாடி அணியின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர். அணி​யின் ஸ்கோர் 99-ஆக இருந்​த​போது பிலிப், வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் வீழ்ந்​தார்.

பின்​னர் வந்த மேட் ரென்​ஷா​வும், மார்​ஷும் நிதானத்​துடன் விளை​யாடி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினர்.

21.1 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 131 ரன்​கள் எடுத்து ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றது. மிட்​செல் மார்ஷ் 46 ரன்​களும், மேட் ரென்ஷா 21 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

முன்னாள் கேப்டன்களை முடக்கிய ஸ்டார்க், ஹேசில்வுட்: ஒரு​நாள் போட்​டிகளில் அதிக ரன்​களைக் குவித்து நட்​சத்​திர வீரர்​களாக
வலம் வரும் முன்​னாள் கேப்​டன்​களான ரோஹித் சர்​மாவை​யும், விராட் கோலியை​யும் ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்​சாளர்​கள் தங்​களது அபார​மான பந்​து​வீச்​சால் கட்​டுப்​படுத்​தினர்.

ஸ்டார்க் பந்​தில் ஒரு பவுண்​டரி உட்பட 8 ரன்​களைச் சேர்த்த ரோஹித் சர்​மா, அதன் பின்​னர் ஹேசில்​வுட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அதைப் போல​வே, விராட் கோலியை தனது அற்​புத​மான பந்​து​வீச்​சால் முடக்​கி​னார் மிட்​செல் ஸ்டார்க். ஆட்​டத்​தின் 5-வது ஓவரை ஸ்டார்க் வீசி​னார். அந்த ஓவர் முழு​வதும் ரன் எடுக்​காமல் மெய்​டன் கொடுத்​தார் விராட் கோலி. அதன் பின்​னர் ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்​திலேயே விராட் கோலி ஆட்​ட​மிழந்​தார்.

4 முறை குறுக்கிட்ட மழை: இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​களுக்கு இடையி​லான முதலா​வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டியில் இந்​திய அணி​யின் பேட்​டிங்​கின்​போது மழை 4 முறை குறுக்​கிட்​டது. இதனால் ஆட்​டம் 26 ஓவர்​களாகக் குறைக்​கப்​பட்​டது. ஸ்ரே​யஸ் ஐயர், அக்​சர் படேல் ஆகியோர் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது இந்​திய அணி 8.5 ஓவரில் 3 விக்​கெட்​டுக்கு 25 ரன்​கள் எடுத்து இருந்​தது. அப்​போது மழை வந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் பாதிக்​கப்​பட்​டு ஆட்​டம் 49 ஓவர்​களாக குறைக்​கப்​பட்​டது. அதன் பின்​னர் இந்​திய அணி 11.5 ஓவரில் 3 விக்​கெட்​டுக்கு 37 ரன்​கள் எடுத்​திருந்​த​போது ஆட்​டம் மீண்​டும் மழை​யால் தடைபட்​டது.

மழை நின்ற நிலை​யில், ஆட்​டம் தொடங்​கிய​போது ஆட்​டம் 35 ஓவர்​களாக குறைக்​கப்​பட்​டது. 14.2 ஓவர்​களில் மீண்​டும் மழை குறுக்​கிட்டு சிறிது நேரம் ஆட்​டம் பாதிக்​கப்​பட்​டது. மழை நின்ற பின்​னர் மீண்​டும் போட்டி தொடங்​கிய நிலை​யில் ஆட்​டம் 32 ஓவர்​களாக குறைக்​கப்​பட்​டது. சிறிது நேரத்​தில் மீண்​டும் மழை பெய்​யத் தொடங்​கியது. மழை நின்​றதும் ஆட்​டம் சிறிது நேரம் கழித்து தொடங்​கியபோது ஆட்​டம் 26 ஓவர்​களாக குறைக்​கப்​பட்​டது. இந்திய அணி​யின் பேட்​டிங்​கின்​போது மட்​டும் 4 முறை மழை குறுக்​கிட்​டது.

500-வது போட்டியில் விளையாடிய ரோஹித்: நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்று விளையாடினார். இது அவர் பங்கேற்று விளையாடும் 500-வது சர்வதேச போட்டியாகும்.

இதன்மூலம் 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் (664 சர்வதேச போட்டிகள்), விராட் கோலி (551 சர்வதேச போட்டிகள்), எம்.எஸ்.தோனி (535 சர்வதேச போட்டிகள்), ராகுல் திராவிட் (504 சர்வதேச போட்டிகள்) ஆகியோர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர்.

ஆட்டநாயகன்: 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நித்திஷ் ரெட்டி அறிமுகம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நித்திஷ் குமார் ரெட்டி அறிமுகமானார். போட்டிக்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, நித்திஷ் குமார் ரெட்டியிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார். இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஓவன், மேத்யூ ரென்சா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி விளையாடினர்.

முதல் தோல்வி: 2025-ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பெறும் முதல் தோல்வி இதுவாகும்.இதற்கு முன்பு 1978-ல் அக்டோபர் 13-லும், 1991-ல் அக்டோபர் 23-லும், 1980-ல் டிசம்பர் 18-லும் இந்திய அணி அந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக தோல்வி கண்டிருந்தது. அதாவது அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த அணி, ஆண்டின் கடைசியில் முதல் தோல்வியைப் பெற்றிருந்தது.

அடிலெய்டில் 2-வது போட்டி: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2- வது போட்டி அடிலெய்டு மைதானத்தில் வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x