Published : 20 Oct 2025 08:37 AM
Last Updated : 20 Oct 2025 08:37 AM

உலக ஜூனியர் பாட்மிண்டன்: தன்விக்கு வெள்ளிப் பதக்கம்

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை தன்வி சர்மா வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

அசாம் மாநிலம் குவாஹாட்​டி​யில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் தன்வி சர்​மா, தாய்​லாந்து வீராங்​கனை அன்​யா​பாட் பிச்​சிட்​பிரீச்​சாஸக் ஆகியோர் விளை​யாடினர். இதில் தன்வி சர்மா 7-15, 12-15 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்து வீராங்​கனை அன்​யா​பாட் பிச்​சிட்​பிரீச்​சாஸக்​கிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்​தார். இதையடுத்து அவருக்கு வெள்​ளிப் பதக்​கம் கிடைத்​தது.

இதன்​மூலம் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப்​பில் வெள்ளி வென்ற 5-வது இந்​தி​யர் என்ற பெரு​மையை தன்வி பெற்​றார். இதற்கு முன்பு அபர்ணா பொப்​பட் (1996), சாய்னா நெவால் (2006), சிரில் வர்மா (2015), சங்​கர் முத்​து​சாமி (2022) ஆகியோர் உலக ஜூனியர் பாட்​மிண்​டனில் வெள்ளி வென்​றிருந்​தனர்.

உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டிகளில் தங்​கம் வென்ற ஒரே இந்​தி​யர் என்ற பெரு​மையை சாய்னா நெவால் பெற்​றுள்​ளார். இவர் 2008-ம் ஆண்டு இந்​தப் போட்​டி​யில் தங்​கம் வென்​றிருந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x