Published : 19 Oct 2025 07:33 AM
Last Updated : 19 Oct 2025 07:33 AM

இங்கிலாந்துடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய மகளிர் அணி

இந்தூர்: ஐசிசி மகளிர் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு இந்​தூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - இங்​கிலாந்து அணி​கள் மோதுகின்​றன.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி முதல் ஆட்​டத்​தில் 59 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்​கை​யை​யும், 2-வது ஆட்​டத்​தில் 88 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை​யும் தோற்​கடித்து இருந்​தது. ஆனால் அடுத்த 2 ஆட்​டங்​களில் தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலிய அணி​களுக்கு எதி​ராக தலா 3 விக்​கெட்கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது.

4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள இந்​திய அணி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. இன்​றைய ஆட்​டம் உட்பட இந்​திய அணிக்கு 3 ஆட்​டங்​களே எஞ்சி உள்​ளன. இதில் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றால் மட்​டுமே அரை இறு​திக்கு முன்​னேற முடி​யும் என்ற நெருக்​கடி உடன் இந்​திய மகளிர் அணி உள்​ளது.

இந்​திய மகளிர் அணி நடப்பு தொடரில் 5 பந்து வீச்​சாளர்​களு​டன் விளை​யாடி வரு​கிறது. இதில் 3 பேர் ஆல்​ர​வுண்​டர்​களாக உள்​ளனர். கடைசி​யாக விளை​யாடிய இரு ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​ததற்கு இந்த யுக்​தியே காரண​மாக அமைந்​தது. இந்த இரு ஆட்​டங்​களி​லும் 6-வது பந்து வீச்​சாளர் இல்​லாதது பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தி​யது. இந்த பிரச்​சினைக்கு இன்​றைய ஆட்​டத்​தில் தீர்வு காண இந்​திய அணி முயற்​சிக்​கக்​கூடும்.

இங்​கிலாந்து அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு முடி​வில்​லாத ஆட்​டம் என 7 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தில் உள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் அந்த அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் அரை இறு​திக்கு முன்​னேறுவதை உறு​தி செய்​யும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x