Published : 19 Oct 2025 04:00 AM
Last Updated : 19 Oct 2025 04:00 AM

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

பெர்த்: இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்​டஸ் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​திய அணி புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

சீனியர் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் முன்​னாள் கேப்​ட​னான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​யில் களமிறங்க உள்​ளனர். டி20, டெஸ்ட் போட்​டிகளில் இருந்து இவர்​கள் ஓய்வு பெற்​று​விட்​ட​தால் இனிமேல் ஒரு​நாள் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாட உள்​ளனர்.

இதனால் ரோஹித் சர்​மா, விராட் கோலி​யின் ஆட்​டத்தை காண்​ப​தில் ரசிகர்​கள் மத்​தி​யில் மிகுந்த எதிர்​பார்ப்பு நிலவி வரு​கிறது. ஆஸ்​திரேலிய தொடருக்​காக இவர்​கள் இரு​வரும் தீவிர பயிற்​சிகளை எடுத்​துள்​ளனர். ரோஹித் சர்மா தனது உடல் எடையை கணிச​மாக குறைத்​துள்​ளார். மும்​பை​யில் அவர், அபிஷேக் நாயர் உதவி​யுடன் சில அமர்​வு​கள் பயிற்சி எடுத்​துள்​ளார். விராட் கோலி லண்​டனில் தனி​யார் பயிற்​சி​யாளர் உதவி​யுடன் நீண்ட நேரம் பயிற்​சிக்கு செல​விட்​டிருந்​தார்.

எனினும் இந்த இரண்டு ஜாம்​ப​வான்​களுக்​கும் உள்ள ஒரே சவால் என்​னவென்​றால், ஒரே ஒரு வடிவி​லான போட்​டி​யில் மட்​டும் விளை​யாட முடிவு செய்​து​விட்டு ஐபிஎல் தொடருக்கு பின்​னர் நீண்ட நாட்​களுக்கு பிறகு சர்​வ​தேச போட்​டி​யில் களமிறங்​கு​வது​தான். எனினும் இவர்​கள் தங்​களது கிரிக்​கெட் பயணத்​தில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்தி உள்​ளனர்.

சீனியர் நட்​சத்​திரங்​களான இவர்​கள் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை வரை விளை​யாட முடிவு செய்​துள்​ளனர். இதற்கு இந்த ஆஸ்​திரேலிய தொடர் தொடக்க புள்​ளி​யாக அமையக்​கூடும். இங்​கிருந்து அவர்​கள், தங்​களது இறு​திக்​கட்ட கிரிக்​கெட் பயணத்தை கட்​டமைக்க உள்​ளனர். கேப்​டன் பொறுப்​பில் இருந்து விடுக்​கப்​பட்​டுள்ள ரோஹித் சர்மா சீனியர் வீரர் என்ற புதிய பாத்​திரத்​துடன் செயல்பட உள்​ளார்.

ரோஹித் சர்மா கடைசி​யாக டி20 மற்​றும் ஒரு​நாள் போட்​டிகளில் இந்​திய அணிக்கு ஐசிசி கோப்​பைகளை கேப்​ட​னாக வென்று கொடுத்​திருந்​தார். மெல்​பர்​னில் தனது கடைசி டெஸ்ட் போட்​டி​யிலும் அவர் அணியை வழிநடத்​தி​யிருந்​தார். விராட் கோலி மீண்​டும் ரன்​வேட்டை நிகழ்த்த முடிந்​தால், ரோஹித் சர்மா தனது அபார​மான ஷாட்​களால் எதிரணிக்கு தொடக்​கத்​திலேயே அச்​சுறுத்​தலை அளிக்க முடிந்​தால், இவர்​கள் இரு​வரும் உலகக் கோப்பை தொடர் வரை நிலைத்​திருக்​கலாம்.

ஏனெனில் தற்​போதைய தேர்​வாளர்​களும் அணி நிர்​வாக​மும் எதிர்​காலத்தை மனதில் கொண்​டு, குறிப்​பாக 2027-ம் ஆண்டு ஒரு​நாள் உலகக் கோப்​பையை கருத்​தில் கொண்டு சில முக்​கிய முடிவு​களை எடுக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளனர். மேலும் புகழ்​பெற்ற கிரிக்​கெட் வீரர்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது தலைமை பொறுப்​பில் இல்லை என்​ப​தை​யும், தங்​களுக்​கான ஆடம்​பர​மான சூழ்​நிலை இல்லை என்​ப​தை​யும் அறி​வார்​கள். இதனால் அவர்​களிடம் இருந்து எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாமல் சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில்​லுக்கு இந்த தொடர் சவாலாக அமையக்​கூடும். ஏனெனில் அணியை கட்​டமைத்து அடுத்து கட்​டத்​துக்கு கொண்டு செல்ல வேண்​டிய இடத்​தில் ஷுப்​மன் கில் உள்​ளார். அவருக்கு ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் உறு​துணை​யாக இருக்​கக்​கூடும். 26 வயதான ஷுப்​மன் கில் டெஸ்ட் கிரிக்​கெட்​டில், கேப்​ட​னாக​வும், பேட்​ஸ்​மே​னாக​வும் இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் அபார​மான செயல் திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். தற்​போது அவரது ஒரு​நாள் போட்டி கேப்​டன்​ஷிப்​பும் வெளி​நாட்​டிலேயே தொடங்​கு​கிறது. ரோஹித் சர்​மா, ஒரு​நாள் போட்​டி​யின் கேப்​ட​னாக இந்​திய அணி​யில் உயர்ந்த தரநிலையை உரு​வாக்​கி​யிருந்​தார்.

அவரது தலை​மை​யின் கீழ் இந்​திய அணி 75 சதவீத வெற்​றிகளை குவித்​திருந்​தது. இதே​போன்ற செயல்​திறனை வெளிப்​படுத்​து​வ​தில் ஷுப்​மன் கில் முனைப்பு காட்​டக்​கூடும். ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயணத்​தில் கேப்​ட​னாக​வும், பேட்​ஸ்​மே​னாக​வும் ஷுப்​மன் கில் சிறப்​பாக செயல்பட முடிந்​தால், அது ஒரு கேப்​ட​னாக அவரது தன்​னம்​பிக்​கையை மேலும் அதி​கரிக்​கும்.

பாட் கம்​மின்ஸ் காயம் காரண​மாக அவதிப்​பட்டு வரு​வ​தால் ஆஸ்​திரேலிய அணி மிட்​செல் மார்ஷ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. பிர​தான வேகப்​பந்து வீச்​சாள​ரான பாட் கம்​மின்ஸ் இல்​லாத போதி​லும் மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட் வேகக்​கூட்​டணி இந்​திய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். பேட்​டிங்​கில் டிரா​விஸ் ஹெட், கூப்​பர் கானொலி, மார்​னஷ் லபுஷேன், மேத்யூ ரென்ஷா ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட், இந்​திய பந்து வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் தொடக்க வீரர்​களாக ஷுப்​மன் கில், ரோஹித் சர்மா களமிறங்​கக்​கூடும். இதைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்​.​ராகுல் ஆகியோர் இடம் பெறு​வார்​கள். வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக நித்​திஷ் குமார் ரெட்​டி​யும், சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக அக்​சர் படேலும் சேர்க்​கப்​படக்​கூடும். பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ராக குல்​தீப் யாதவ் களமிறங்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்சாளர்​களாக முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அல்​லது ஹர்​ஷித்​ ராணா இடம்​ பெறக்​கூடும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x