Published : 18 Oct 2025 09:29 AM
Last Updated : 18 Oct 2025 09:29 AM

சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி: இறுதிப் போட்டியில் இந்தியா

ஹோகூர் பஹ்ரு: சுல்​தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசி​யா​வில் நடை​பெற்று வரு​கிறது.

6 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடரில் இதில் இந்​திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நேற்று மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் 22-வது நிமிடத்​தில் குர்​ஜோத் சிங்​கும், 48-வது நிமிடத்​தில் சவுரப் ஆனந்த் குஷ்​வாஹா 48-வது நிமிடத்​தி​லும் கோல் அடித்து அசத்​தினர்.

இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி 10 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இந்​திய அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு டிரா, ஒரு தோல்​வியை பதிவு செய்​திருந்​தது. இது​வரை நடை​பெற்​றுள்ள 12 தொடர்​களில் இந்​திய அணி 8-வது முறை​யாக இறு​திப் போட்​டி​யில் கால்​ப​தித்​துள்​ளது. இன்று (18-ம் தேதி) நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி, ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x