Published : 18 Oct 2025 08:49 AM
Last Updated : 18 Oct 2025 08:49 AM

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் - கேமரூன் கிரீன் விலகல்; மார்னஷ் லபுஷேன் சேர்ப்பு

பெர்த்: இந்​திய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இருந்து காயம் காரண​மாக ஆஸ்​திரேலிய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மார்​னஷ் லபுஷேன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலியா சென்​றுள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் வரும் 19ம் தேதி பெர்த் நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான ஆஸ்​திரேலிய அணி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் இடுப்பு பகு​தி​யில் ஏற்​பட்ட தசைப்​பிடிப்பு காரண​மாக இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரில் இருந்து கேமரூன் கிரீன் விலகி உள்​ளார்.

அடுத்த மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்க உள்​ளதை கருத்​தில் கொண்டு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக இந்த முடிவை ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் எடுத்​துள்​ளது. கேமரூன் கிரீன் வில​கியதை தொடர்ந்து இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரில் சீனியர் பேட்​ஸ்​மே​னான மார்​னஷ் லபுஷேன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

மார்​னஷ் லபுஷேன், உள்​நாட்டு கிரிக்​கெட் தொட​ரான ஷெப்ஃபில்டு ஷீல்டு போட்​டி​யில் குயின்​ஸ்​லாந்து அணிக்​காக கடந்த 16ம் தேதி நடை​பெற்ற ஆட்​டத்​தில் சதம் அடித்​திருந்​தார். இந்த சீசனில் உள்​நாட்டு கிரிக்​கெட்​டில் அவரது 4வது சதம் இது​வாகும். நடப்பு பார்மை கருத்​தில் கொண்டு அவர், ஆஸ்​திரேலிய அணிக்​குள் மீண்​டும் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளார். இந்​தி​யா​வுக்கு எதி​ரான தொடரில் ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் மாற்​றங்​களை மேற்​கொள்​வது இது 3வது முறை​யாகும்.

இந்​தத் தொடரில் முதல் போட்​டி​யில் பங்​கேற்​காத ஆடம் ஸம்​பா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்​லிஷ் ஆகியோர் கடைசி இரு ஆட்​டங்​களி​லும் விளை​யாடு​வார்​கள் எனவும் ஏற்​கெனவே தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆஸ்​திரேலிய அணி விவரம்: மிட்​செல் மார்​ஷ்(கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், மார்​னஸ் லபுஷேன், மிட்​செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்​ஷா, மேத்யூ ஷார்ட், மேத்யூ குனேமன், மிட்​செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்​லெட், கூப்​பர் கோனொலி, பென் டுவார்​ஷு​யிஸ்​, நேதன்​ எல்​லிஸ்​, ஜோஷ் ஹேசில்​வுட்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x