Published : 16 Oct 2025 07:31 AM
Last Updated : 16 Oct 2025 07:31 AM
துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அவர் 689 புள்ளிகளுடன் 21-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி தரவரிசைப் பட்டியலில் குல்தீப் யாதவ் பெற்றுள்ள அதிகபட்ச இடமாகும் இது.
இந்தப் பட்டியலின் முதல் 3 இடங்களில் ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), மேட் ஹென்றி (ஆஸ்திரேலிா) ஆகியோர் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு வந்துள்ளார். முதல் 3 இடங்களில் ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்து) ஆகியோர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT