Published : 14 Oct 2025 10:44 AM
Last Updated : 14 Oct 2025 10:44 AM
அக்ரா: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 5-வது ஆப்பிரிக்க அணியாக கானா தகுதி பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் அக்ராவில் கானா - கொமொரோஸ் அணிகள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் கானா அணி ‘ஐ’ பிரிவில் 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ள 5-வது ஆப்பிரிக்க அணி கானா ஆகும். அந்த வகையில் அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, துனிசியா ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT