Published : 14 Oct 2025 10:41 AM
Last Updated : 14 Oct 2025 10:41 AM

லாகூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

லாகூர்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 93, கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தனர்.

முகமது ரிஸ்வான் 62, சல்மான் ஆகா 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 110.4 ஓவர்களில் 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 75, சல்மான் ஆகா 93 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பிரனலன் சுப்ராயன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 20, ரியான் ரிக்கெல்டன் 71, வியான் முல்டர் 17, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8, டெவால்ட் பிரேவிஸ் 0, கைல் வெர்ரைன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். டோனி டி ஸோர்ஸி 81 ரன்களும், செனுரன் முத்துசாமி 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். சஜித் கான், சல்மான் ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 162 ரன்கள் பின்தங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 4 விக்கெட்கள் உள்ள நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x