Published : 14 Oct 2025 08:37 AM
Last Updated : 14 Oct 2025 08:37 AM

வெற்றியின் விளிம்பில் இந்திய அணி: கடைசி நாளில் 58 ரன் தேவை

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு கடைசி நாளான இன்று மேற்​கொண்டு 58 ரன்​கள் மட்​டுமே தேவை​யாக உள்​ளது.

டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக ஜெய்​ஸ்​வால் 175, கேப்​டன் ஷுப்​மன் கில் 129, சாய் சுதர்​சன் 87 ரன்​கள் சேர்த்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 81.5 ஓவர்​களில் 248 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் பெற்​றது.

இதனால் 270 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 49 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் எடுத்​தது. ஜான் கேம்​பல் 87, ஷாய் ஹோப் 66 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். டேக் நரைன் சந்​தர்​பால் 10, அலிக் அத்​தானஸ் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்து இருந்​தனர். நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தொடர்ந்து விளை​யாடியது.

பார்ட்​னர்​ஷிப்பை சிறப்​பாக கட்​டமைத்த ஜான் கேம்​பல் 174 பந்​துகளில், 9 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் தனது முதல் சதத்தை விளாசி​னார். அதேவேளை​யில் ஷாய் ஹோப் 204 பந்​துகளில், 12 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் சதம் விளாசி​னார். இது அவருக்கு 3-வது சதமாக அமைந்​தது. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் 8 வருடங்​களுக்கு பிறகு அவர், அடித்த சதமாக​வும் இது அமைந்​தது. கடைசி​யாக அவர், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்​டில் இங்​கிலாந்​துக்கு எதி​ராக சதம் அடித்து இருந்​தார். 3-வது விக்​கெட்​டுக்கு 295 பந்​துகளை எதிர்​கொண்டு 177 ரன்​கள் சேர்த்து கடும் சவால் அளித்த இந்த ஜோடியை ரவீந்​திர ஜடேஜா பிரித்​தார்.

ஜான் கேம்​பல் 199 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 115 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ராஸ்​டன் சேஸ் சீராக ரன்​கள் சேர்த்​தார். நிதான​மாக விளை​யாடி வந்த ஷாய் ஹோப் 214 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது சிராஜ் பந்​தில் போல்​டா​னார். இதன் பின்​னர் களமிறங்​கிய விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான டெவின் இம்​லாக் 12 ரன்​னில் குல்​தீப் யாதவ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார்.

இதன் பின்​னர் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி ஆட்​டம் கண்​டது. ராஸ்​டன் சேஸ் 72 பந்​துகளில், 4 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 40 ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் பதிலி வீர​ரான தேவ்​தத் படிக்​கலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து ஹாரி பியரை டக் அவுட்​டில் வெளி​யேற்​றி​னார் குல்​தீப் யாதவ். ஜோமன் வாரிக்​கன் (3), ஆண்​டர்​சன் பிலிப் (2) ஆகியோர் ஜஸ்​பிரீத் பும்ரா பந்​தில் அவுட்​டா​னார்​கள். 311 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜஸ்​டின் கீரிவ்​ஸ், ஜெய்​டன் சீல்ஸ் ஜோடி இந்​திய பந்து வீச்​சாளர்​களை சோதனைக்கு உட்​படுத்​தி​யது.

இந்த ஜோடி கடைசி விக்​கெட்​டுக்கு 133 பந்​துகளை எதிர்​கொண்டு 79 ரன்​களை சேர்த்த பிறகு​தான் பிரிந்​தது. ஜெய்​டன் சீல்ஸ் 67 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்தை ஸ்கொயர் லெக் திசை​யில் அடித்த போது வாஷிங்​டன் சுந்​தரிடம் கேட்ச் ஆனது. முடி​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 118.5 ஓவர்​களில் 390 ரன்​கள் குவித்து அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்​தது. ஜஸ்​டின் கிரீவ்ஸ் 85 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இந்​திய அணி தரப்​பில் ஜஸ்​பிரீத் பும்​ரா, குல்​தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது சிராஜ் 2 விக்​கெட்​களை​யும் ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். இதையடுத்து 121 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 18 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 63 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​கன் பந்​தில் ஆண்​டர்​சன் பிலிப்​பிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். கே.எல்​.​ராகுல் 54 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும், சாய் சுதர்​சன் 47 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

கைவசம் 9 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 58 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இந்​திய அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது. இந்த போட்​டி​யில் இந்​திய அணி வெற்​றி​யின் விளிம்​பில் உள்​ளது. இதனால் டெஸ்ட் தொடரை இந்​திய அணி 2-0 என முழு​மை​யாக கைப்​பற்​று​வது உறு​தி​யாகி உள்​ளது. அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்​ஸ் மற்​றும்​ 140 ரன்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x