Published : 12 Oct 2025 12:17 PM
Last Updated : 12 Oct 2025 12:17 PM

கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? - ஒரு பார்வை

பெரும்​பாலான கிரிக்​கெட் மைதானங்​களில் பல்​வேறு ஆடு​களங்​கள் (பிட்ச்) அமைக்​கப்​பட்​டிருக்​கும். இது ஏன் என தெரி​யு​மா?

கிரிக்​கெட் போட்டி நடை​பெறும் மைதானங்​களில் பிர​தான ஆடு​களத்தை தவிர அரு​கருகே மேலும் சில ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​பட்​டிருக்​கும். இதற்கு முக்​கிய காரணம் ஒரு போட்டி தொடங்​கு​வதற்கு முன்​னர் அதற்​காகவே தயார் செய்​யப்​பட்டு வைத்​திருக்​கும் ஆடு​களத்​தில் வீரர்​கள் பயிற்சி பெற அனு​ம​திக்​க​மாட்​டார்​கள்.

ஏனெனில் ஒவ்​வொரு ஆடு​களத்​தை​யும் தயார் செய்​வதற்கு பல நாட்​கள் ஆகும். அது மட்​டும் அல்​லாமல் அந்த ஆடு​களத்​தில் பயிற்சி செய்​தால் சேதம் அடைவதற்​கான வாய்ப்பு உள்​ளது. அந்த ஆடு​களம் விளை​யாடு​வதற்கு உகந்த வகை​யில் இருக்​கிறதா என போட்டி அதி​காரி​கள் செய்த ஆய்​வு​களுக்கு பலன் இல்​லாமல் போய்​விடும். அதற்​காக அந்த போட்​டி​யில் விளை​யாட வரும் அணி ஆடு​களத்​தில் வலை பயிற்சி செய்​யாமலும் இருக்க முடி​யாது.

இதனால் அந்த ஆடு​களத்​தின் அருகே வேறு ஆடு​களங்​கள் இருந்​தால் அந்த வீரர்​கள் வலை பயிற்சி மேற்​கொள்ள உதவி​யாக இருக்​கும். இந்த அடிப்​படை​யிலேயே கூடு​தலான ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​படு​கின்​றன. எனினும் பிர​தான ஆடு​களத்​தில் இருந்து மற்ற ஆடு​களங்​களின் தன்மை மாறு​பட்​டிருக்​கும். இது பல்​வேறு ஆடு​களங்​களில் எவ்​வாறு ரன்​கள் சேர்க்க வேண்​டும் என அனுபவத்தை வீரர்​களுக்கு கொடுக்​கும்.

சில நேரங்​களில் போட்டி நடை​பெறும் போது ஆடு​களத்​தின் தன்மை மோச​மான நிலைக்கு சென்று அந்த ஆடு​களம் விளை​யாடு​வதற்கு தகுந்த வகை​யில் இல்லை என நடு​வர்​கள் கூறி​னால் வேறு ஒரு ஆடு​களத்​தில் அந்த போட்​டியை தொடரலாம். ஆனால் அதற்கு இரு அணி​களின் கேப்​டன்​களும் சம்​மதம் தெரிவிக்க வேண்​டும். மேலும் வானிலை காரணம், வெளிப்​புற பிரச்​சினை​கள் காரண​மாக​வும் மாற்று ஆடு​களத்தை பயன்​படுத்​தலாம்.

எந்த வகை​யிலும் போட்​டியை நடத்​து​வ​தில் தடை ஏற்​பட்​டு​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே மாற்று ஏற்​பா​டாக அரு​கில் கூடு​தலாக ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​படு​கின்​றன. மேலும் ஒரே ஆடு​களத்​தில் அடுத்​தடுத்து போட்​டிகள் நடை​பெறும் வகை​யில் திட்​ட​மிடப்​படும் அட்​ட​வணை​களுக்கா​கவும் இந்த ஆடு​களங்​கள்​ பயன்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x