Published : 10 Oct 2025 10:30 AM
Last Updated : 10 Oct 2025 10:30 AM

கிரிக்கெட் பந்தின் சுற்றளவை அறிய உதவும் ரிங் கேஜ் கருவி!

பொது​வாக கிரிக்​கெட் போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக நடு​வர்​கள் போட்​டிக்கு பயன்​படுத்​தும் பந்​தின் எடை, வடிவம் மற்​றும் பந்​தின் தன்மை ஆகிய​வற்றை சோதித்து பார்ப்​பார்​கள். அனைத்​தும் விதி​முறை​களின்​படி சரி​யாக இருந்​தால் மட்​டுமே அந்த பந்தை பயன்​படுத்​து​வார்​கள்.

எம்​சிசி கிரிக்​கெட் சட்ட விதி​களின்​படி பந்​துகளின் அளவு குறிப்​பிட்ட அளவில்​தான் இருக்க வேண்​டும். இது ஆடவர், மகளிர், ஜூனியர் கிரிக்​கெட் போட்​டிகளுக்கு தகுந்​த​வாறு மாறு​படும். ஆடவர் கிரிக்​கெட்​டில் பந்​தின் எடை குறைந்​த​பட்​சம் 155.9 கிராம் எடை​யும் அதி​கபட்​சம் 163 கிராம் எடை​யும் இருக்க வேண்​டும். அதேவேளை​யில் பந்​தின் சுற்​றளவு குறைந்​த​பட்​சம் 22.4 சென்டி மீட்​டரும், அதி​கபட்​சம் 22.9 சென்டி மீட்​டரும் இருக்க வேண்​டும்.

இந்த பந்​துகளின் சுற்​றளவை கணக்​கிடு​வதற்கு நடு​வர்​களிடம் பால் கேஜ் அல்​லது ரிங் கேஜ் என்ற கருவி இருக்​கும். இதில் இரண்டு வளை​யங்​கள் இருக்​கும். ஒன்​றன் பெயர் கோ கேஜ். இது அதிக விட்​டம் கொண்​டது. இதன் வழி​யாக பந்தை நுழைக்​கும்​போது எந்​த​வித இடையூறும் இல்​லாமல் செல்ல வேண்​டும். அப்​படி இருந்​தால் விதி​முறைக்​குட்​பட்​ட அந்த பந்து போட்​டி​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​படும். அதாவது கோ கேஜின் சுற்​றளவை​விட பந்​தின் சுற்​றளவு அதி​க​மாக இருக்​கக்​கூ​டாது. ஒரு​வேளை கோ கேஜில் பந்தை நுழைக்​கும் போது அது தட்டி நின்​றால் பந்​தின் சுற்​றளவு அதி​க​மாக இருப்​ப​தாக கருதி அந்த பந்தை பயன்​படுத்த அனு​ம​திக்​க​மாட்​டார்​கள். வேறு ஒரு பந்​தை​தான் பயன்​படுத்த வேண்​டியது இருக்​கும்.

அரு​கில் இருக்​கும் மற்​றொரு வளை​யம் நோ கோ கேஜ் என்​றழைக்​கப்​படும். இது கோ கோஜ் சுற்​றளவை​விட சற்று குறை​வாக இருக்​கும். இந்த வளை​யத்​தில் பந்தை நுழைக்​கும் போது அது வெளியே வரக்​கூ​டாது. அவ்​வாறு இருந்​தால் அந்த பந்து விதி​முறை​களின் படி சரி​யாக உள்​ள​தாக கருதி அனு​ம​திக்​கப்​படும். ஒரு​வேளை பந்து இந்த வளை​யத்​தின் வழியே வெளியே வந்​து​
விட்​டால் அந்த பந்​தின் சுற்​றளவு நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட குறை​வாக உள்​ள​தாக கூறி அதை போட்​டி​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​க​மாட்​டார்​கள்.

போட்​டி​யின் தொடக்​கத்​தில் மட்​டும் அல்ல இடை​யில் கூட இந்த ரிங் கேஜை பரிசோதனை செய்​வார்​கள். போட்​டி​யின் போது பந்து சேதம் அடைந்து பந்து வீசுவதற்கு உகந்​த​தாக இல்லை என அணி​யின் கேப்​டன் கரு​தி​னால் இது குறித்து களநடு​வரிடம் முறை​யிடு​வார்​கள். அப்​போது அந்த பந்து பயன்​படுத்​தப்​படும் நிலை​யில் உள்​ளதா என ரிங் கேஜ் கரு​வியை கொண்டு நடு​வர் சோதனை செய்​வார். இதில் பந்து நுழைந்து வெளியேவந்து​விட்​டால் அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தலாம். மாறாக பந்து வளை​யத்​துக்​குள் நுழைய​வில்லை என்​றால் அந்த பந்​தின் தன்மை மாறி​விட்​ட​தாக கருதி அதை அகற்​றி​விட்டு வேறு பந்தை
பயன்​படுத்​து​வார்​கள்.

கோ கேஜ் வளை​யத்​தில் பந்து நுழைந்​தா​லும், நோ கோஜ் வளை​யத்​தில் பந்தை வைத்து சோதிப்​பார்​கள். இதில் வளை​யத்​தின் பக்​க​வாட்​டில் இடைவெளி இருந்​தால் அந்த பந்து அதன் தன்​மையை இழந்​து​விட்​ட​தாக கருதி அகற்​றி​விடு​வார்​கள். அதற்கு பதிலாக வேறு பந்து பயன்​படுத்​தப்​படும். ஆனால் ஓரளவு மட்​டுமே இடைவெளி இருந்​தால் அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தலாம் என்று கூறி​விடு​வார்​கள். பந்து வீசும் அணி புகார் கூறு​வதை​யும், அதன் பின்​னர் நடு​வர் பந்தை சோதித்​து​விட்டு சரி​யாகத்​தான் உள்​ளது என கூறி அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தக்​கூறு​வதும், இதற்கு அந்த அணி​யின் கேப்​டன் விரக்​தி​யடைவதும் களத்​தில் நாம்​ அடிக்​கடி பார்க்​கக்​கூடிய​தாக உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x