Published : 10 Oct 2025 09:46 AM
Last Updated : 10 Oct 2025 09:46 AM
ஜிபூட்டி: 2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு மொராக்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்பது - ஜிபூட்டி அணிகள் மோதின. இதில் எகிப்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது.
எகிப்து அணி தரப்பில் முகமது சலா 14 மற்றும் 84-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். முன்னதாக இப்ராகிம் அடெல் 8-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்திருந்தார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் 3-வது அணி எகிப்து ஆகும். மொராக்கோ, துனிசியா அணிகளும் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT