Published : 08 Oct 2025 10:46 AM
Last Updated : 08 Oct 2025 10:46 AM

மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தோனி! - ரியாக்ட் செய்த ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகியே இருப்பார். உடற்தகுதி, வயது உள்ளிட்ட காரணங்களால் ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. அவரும், இதுவரை தனது நோக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது செயல் ஒன்று ரசிகர்களை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் தனது முழு ஐபிஎல் வாழ்க்கையையும் செலவிட்ட தோனி, சமீபத்தில் கால்பந்து விளையாட்டின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. போட்டிக்குப் பிறகு தோனி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சென்னை அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியின் நீல நிற லோகோவுடன் கூடிய ஜெர்சியில் தோனி நிற்கும் படங்கள் விரைவாக வைரலான நிலையில் இதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x