Published : 05 Oct 2025 11:14 AM
Last Updated : 05 Oct 2025 11:14 AM

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்னிங்ஸ், 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

அகமதாபாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில், இந்​திய அணி ஒரு இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ரவீந்​திர ஜடேஜா ஆட்​ட​நாயகன் விருதை தட்​டிச் சென்​றார். இதையடுத்து டெஸ்ட் தொடரில் இந்​திய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றுள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் கடந்த 2-ம் தேதி தொடங்​கியது.
முதலில் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை தொடங்​கிய இந்​திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் எடுத்​திருந்​தது. கே.எல்​.​ராகுல் 100, துருவ் ஜூரல் 125, ரவீந்​திர ஜடேஜா 104 ரன்​கள் எடுத்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று காலை 3-ம் நாள் ஆட்​டம் தொடங்​கியது. இந்​திய அணி தனது முந்​தைய நாள் ஸ்கோ​ரான 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் என்ற நிலை​யில் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​வ​தாக அறி​வித்​தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 286 ரன்​கள் பின்​னிலை​பெற்ற நிலையில் 2-வது இன்​னிங்ஸை தொடங்​கியது.

ஜான் கேம்​பெல், டேக்​நரைன் சந்​தர்​பால் ஆகியோர் தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கினர். முதல் இன்​னிங்​ஸைப் போலவே 2-வது இன்​னிங்​ஸிலும் தடு​மாறிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீரர்​கள் ஆடு​களத்​துக்கு வரு​வதும், ஆட்​ட​மிழந்து பெவிலியனுக்​குத் திரும்​புவது​மாக இருந்​தனர். கேம்ப்​பெல் 14 ரன்​களும், சந்​தர்​பால் 8 ரன்​களும் எடுத்து வீழ்ந்​தனர்.

இதைத் தொடர்ந்து விளை​யாட வந்​தவர்​களில் அலிக் அத்​த​னாஸ் 38, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 25, ஜான் லேன் 14, ஜெய்​டன் சீல்ஸ் 22 ரன்​கள் எடுத்​தனர். எஞ்​சிய வீரர்​கள் சொற்ப ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ரவீந்​திர ஜடேஜா, முகமது சிராஜ், வாஷிங்​டன் சுந்​தர், குல்​தீப் யாதவ் ஆகியோரின் கட்​டுக்​கோப்​பான பந்​து​வீச்​சில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 45.1 ஓவர்​களில் 146 ரன்​களுக்கு சுருண்​டது.

இதையடுத்து இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்கிறது.

இந்​திய அணி தரப்​பில் ரவீந்​திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3, குல்​தீப் யாதவ், வாஷிங்​டன் சுந்​தர் ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர்.

இரண்டரை நாள்: 5 நாள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி இரண்டரை நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தின்போது முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 2-வது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கே சுருண்டது. டெஸ்ட் போட்டியில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்துவீச்சையும் தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்தனர். பேட்டிங்கின்போது சிறப்பாக விளையாடி 104 ரன்களைக் குவித்ததோடு, 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

2-வது டெஸ்ட்: இந்தத் தொடரில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x