Published : 04 Oct 2025 07:19 AM
Last Updated : 04 Oct 2025 07:19 AM

மே.இ. தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட்: கே.எல்​.​ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா அபார சதம் - இந்தியா 286 ரன்கள் முன்னிலை

அகம​தா​பாத்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி வீரர்​கள் கே.எல்​.​ராகுல், துருவ் ஜூரல், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இதையடுத்து முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 286 ரன்​கள் முன்​னிலை​ பெற்​றுள்​ளது. 2-ம் நாள் ஆட்ட நேர முடி​வில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் குவித்​துள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் கடந்த 2-ம் தேதி தொடங்​கியது.

முதலில் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில், 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜஸ்​டின் கிரீவ்ஸ் 32 ரன்​கள் எடுத்​தார். இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 4, ஜஸ்​பிரீத் பும்ரா 3, குல்​தீப் யாதவ் 2, வாஷிங்​டன் சுந்​தர் ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 121 ரன்​கள் எடுத்​திருந்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 36 ரன்​களும், சாய் சுதர்​ஷன் 7 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் ஷுப்​மன் கில் 18 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 53 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்​றைய 2-ம் நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடங்​கியது. சிறப்​பாக விளை​யாடிக் கொண்​டிருந்த கேப்​டன் கில், சரி​யாக 50 ரன்​கள் எடுத்த நிலை​யில், ராஸ்​டன் சேஸ் பந்​து​வீச்​சில், ஜஸ்​டின் கிரீவ்​ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து ராகுலுடன், ஜூரல் ஜோடி சேர்ந்​தார். மறு​முனை​யில் அபார​மாக விளை​யாடிய கே.எல்​.​ராகுல் 197 பந்​துகளில் 100 ரன்​கள் எடுத்த நிலை​யில், வாரிக்​கன் பந்​து​ வீச்​சில் கிரீவ்​ஸிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார். இதன் பின்​னர் ஜூரலுடன், ரவீந்​திர ஜடேஜா ஜோடி சேர்ந்​தார்.

இரு​வரும் அபார​மாக விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர். அதிரடி​யாக விளை​யாடிய ஜூரல், டெஸ்ட் போட்​டி​யில் தனது முதல் சதத்​தைப் பதிவு செய்​தார். அவர் 210 பந்​துகளைச் சந்​தித்து 125 ரன்​கள் எடுத்​திருந்​த​போது, காரி பியரி பந்​து​வீச்​சில், ஷாய் ஹோப்​பிடம் பிடி​கொடுத்து வீழ்ந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஜூரல் - ஜடேஜா ஜோடி, 206 ரன்​களைக் குவித்​தது. மறு​முனை​யில் அதிரடி​யாக ரவீந்​திர ஜடேஜா, சதம் விளாசி​னார். ஆட்​டநேர இறு​தி​யில் இந்​திய அணி 128 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 448 ரன்​கள் குவித்​துள்​ளது.

ஜடேஜா 104 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 8 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர். இதையடுத்து முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 286 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்​ளது. மேற்கு இந்​தியத் தீவு​கள் அணி தரப்​பில் ராஸ்​டன் சேஸ் 2, ஜோமல் வாரிக்​கன், காரி பியரி, ஜெய்​டன் சீல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். இந்​நிலை​யில் இன்று 3-ம் நாள் ஆட்​டம் தொடர்ந்து நடை​பெறவுள்​ளது.

11-வது சதம்: இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தனது 11-வது சதத்தை விளாசியுள்ளார். 6-வது போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜூரலுக்கு, டெஸ்ட் போட்டிகளில் இது முதலாவது சதமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் தனது 6-வது சதத்தைப் பதிவு
செய்தார்.

3 வீரர்கள், 3 சதம்: இந்தப் போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சதமடித்துள்ளனர். 2025-ல் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் ஒருடெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 3 பேர் சதமடிப்பது இது 3-வது முறை. இந்த ஆண்டில் லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால், கில், பந்த் ஆகியோரும், மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரும் சதம் விளாசியிருந்தனர். தற்போது 3-வது முறையாக ராகுல்,ஜூரல், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.

4-வது முறை: ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் 3 பேர் சதம் விளாசியிருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு 1979, 1986, 2007-ம் ஆண்டுகளில் இந்திய அணி வீரர்கள் 3 பேர், ஒரே இன்னிங்ஸில் சதம் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x