Published : 29 Sep 2025 07:37 AM
Last Updated : 29 Sep 2025 07:37 AM

பிசிசிஐ தலைவராக மிதுன் மனாஸ் தேர்வு

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார்.

பிசிசிஐ-​யின் 37-வது தலை​வர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்​றும் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்​குலிக்​குப் பிறகு பிசிசிஐ-​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற மூன்​றாவது முதல் தர கிரிக்​கெட் வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார் மிதுன் மனாஸ்.

மிதுன் மனாஸ் முதல்தர கிரிக்​கெட்​டில் 1547 ஆட்​டங்​கள், லிஸ்ட் ஏ போட்​டி​யில் 130 ஆட்​டங்​கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளார். ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்​கெட் சங்​கத்​தின் நிர்​வாகக் குறை​பாடு காரண​மாக, அதன் விவ​காரங்​களை நிர்​வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட தற்​காலிகக் குழு​வின் இயக்​குந​ராக​வும் மிதுன் மனாஸ் பணி​யாற்றி உள்​ளார்.

செய​லா​ள​ராக தேவஜித் சைகி​யா, ஐபிஎல் ஆட்​சிமன்​றக்​குழு தலை​வர் அருண் துமால் ஆகியோர் மீண்​டும் தேர்​வாகி உள்​ளனர். கர்​நாடக கிரிக்​கெட் சங்க தலை​வ​ரான ரகு​ராம் பாத், பொருளாள​ராக தேர்​வாகி உள்​ளார். சீனியர் நிர்​வாகி​யான ராஜீவ் சுக்​லா, துணை தலை​வ​ராக தொடர்​கிறார். இவர்​கள் அனை​வருமே போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​திய அணி​யின் தேர்​வாளர்​கள் குழு​வில் ஆர்​.பி.சிங், பிரக்​யான் ஓஜா சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த எஸ்​.சரத் ஜூனியர் தேர்​வுக்​குழு​வுக்​கு திரும்​பி உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x