Published : 28 Sep 2025 08:35 AM
Last Updated : 28 Sep 2025 08:35 AM

பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி

குவாங்ஜு: தென் கொரி​யா​வின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரி​வில் 18 வயதான இந்​தி​யா​வின் ஷீத்​தல் தேவி 146-143 என்ற கணக்​கில் உலகின் முதல் நிலை வீராங்​க​னை​யான துருக்​கி​யின் ஓஸ்​னூர் க்யூர் கிர்​டியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

மேலும் கலப்பு அணி​கள் பிரி​வில் தோமன் குமாருடன் இணைந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். இந்த ஜோடி வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இங்​கிலாந்​தின் ஜோடை கிரின்​ஹாம், நேதன் மாக்​கு​யின் ஜோடியை 152-149 என்ற கணக்​கில் தோற்​கடித்​தது. மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் சரி​தாவுடன் இணைந்து ஷீத்​தல் தேவி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். இந்த ஜோடி இறு​திப் போட்​டி​யில் துருக்கி ஜோடி​யிடம் 148-152 என்ற கணக்​கில் தோல்வி கண்​டது.

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஷைலேஷ் குமார்: உலக பாரா தடகள சாம்​பியன்​ஷிப் டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தலில் டி 42 பிரி​வில் இந்​தி​யா​வின் ஷைலேஷ் குமார் 1.91 மீட்​டர் உயரம் தாண்டிதங்​கப் பதக்​கம் வென்​றார்.

மற்​றொரு இந்​திய வீர​ரான வருண் சிங் பாத்தி வெண்​கலப்பதக்​க​மும், பாராலிம்​பிக் சாம்​பிய​னான அமெரிக்​கா​வின் எஸ்ரா ஃப்​ரெச் வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர். இரு​வரும் தலா 1.85 மீட்​டர் உயரம் தாண்​டி​னார்​கள். ஆனால் எஸ்ரா ஃப்​ரெச் அதி​க​முறை இந்த உயரத்தை தாண்​டிய​தால் அவர், வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x