Published : 28 Sep 2025 08:27 AM
Last Updated : 28 Sep 2025 08:27 AM

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்​திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 4 சுற்​றி​லும் 3 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது. அதே வேளை​யில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்று மற்​றும் சூப்​பர் 4 சுற்​றில் தலா 2 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது.

ஆசிய கோப்பை வரலாற்​றில் பாகிஸ்​தான் அணி முதன்​முறை​யாக தற்​போது​தான் இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி லீக் சுற்​றில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், சூப்​பர் 4 சுற்​றில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது. இந்​திய அணி​யின் பேட்​டிங்​கில் 204.63 ஸ்டிரைக் ரேட்​டுடன் 309 ரன்​கள் குவித்​துள்ள அபிஷேக் சர்மா மீண்​டும் ஒரு முறை உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் விரை​வாக ஆட்​ட​மிழந்த ஷுப்​மன் கில் கவன​முடன் விளை​யாடக்​கூடும். இது ஒரு​புறம் இருக்க சூர்​யகு​மார் யாத​விடம் இருந்து நடப்பு தொடரில் பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

அவர், இந்த தொடரில் ஒட்​டுமொத்​த​மாக 71 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். கேப்​டன் பணி​யுடன் பேட்​டிங்​கிலும் அவர், கூடு​தல் முனைப்​புடன் செயல்​படும் பட்​சத்​தில் அணி​யின் பலம் அதி​கரிக்​கும். நடு​வரிசை​யில் திலக் வர்​மா, சஞ்சு சாம்​சன் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். ஆல்​ர​வுண்​டர்​களாக அக்​சர் படேல், ஷிவம் துபே சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர்.

சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி 202 ரன்​களை குவித்த போதி​லும் எளி​தாக வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. ஆட்​டத்தை சூப்​பர் ஓவர் வரை கொண்டு சென்றே இந்​திய அணி வெற்றி பெற்​றது. கடந்த ஆட்​டத்​தில் ஓய்வு அளிக்​கப்​பட்​டிருந்த ஜஸ்​பிரீத் பும்ரா இன்று களமிறங்​கு​வது பலம் சேர்க்​கக்​கூடும்.

எனினும் நடப்பு தொடரில் அவரிடம் இருந்து பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. மேலும் துல்​லிய​மாக வீசுவ​தி​லும் அவர், தேக்​கம் அடைந்​துள்​ளார். இறு​திப் போட்டி என்​ப​தால் பும்ரா மீண்​டும் தனது யார்க்​கர்​களால் பலம் சேர்க்க முயற்​சிக்​கக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் 13 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள குல்​தீப் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். வருண் சக்​ர​வர்த்​தி​யும் பலம் சேர்க்​கக்​கூடும்.

பாகிஸ்​தான் அணி​யின் பேட்​டிங், இந்த தொடரில் சொல்​லும்​படி பெரிய அளவில் இல்​லை. ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு எதி​ராக தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்ட சாஹிப்​ஸாதா ஃபர்​ஹானைத் தவிர, வேறு எந்த பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

சைம் அயூப் 4 ஆட்​டங்​களில் டக்​-அவுட் ஆகி உள்​ளார். அதேவேளை​யில் ஹூசைன் தலத், சல்​மான் அலி ஆகா ஆகியோர் சுழற்​பந்து வீச்​சில் தடு​மாறு​வது பலவீன​மாக உள்​ளது. பஹர் ஸமானிடம் இருந்​தும் எதிர்​பார்த்த அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. பேட்​டிங்​கில் தடு​மாறும் பாகிஸ்​தான் அணி பந்து வீச்சு திறனை பெரிதும் நம்பி உள்​ளது. ஷாகின் ஷா அப்​ரிடி, ஹாரிஸ் ரவூஃப் வேகக்​கூட்​டணி இந்​திய அணி​யின் தொடக்க வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

‘களத்தில் தடுக்க மாட்டேன்’ - ​பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா கூறும்​போது, ”ஒவ்​வொரு​வருக்​கும் உணர்ச்​சிகளை வெளிப்​படுத்த உரிமை உண்​டு. ஒரு வேகப்​பந்து வீச்​சாளர் உணர்ச்​சிகளைக் காட்​டு​வதைத் தடுத்​தால், பிறகு என்ன மிஞ்​சும்? அது அவமரி​யாதை​யாக இல்​லாத வரை நான் யாரை​யும் தடுக்க மாட்​டேன்.

இந்​தியா - பாகிஸ்​தான் போட்​டிகள் நிறைய அழுத்​தங்​களு​டன் வரு​கின்​றன. கடந்த இரண்டு ஆட்​டங்​களில் நாங்​கள் அதிக தவறுகளைச் செய்​த​தால் தோற்​றோம். இறு​திப் போட்​டி​யில் இரு அணி​களுக்​கும் ஒரே மாதிரி​யான அழுத்​தமே இருக்​கும். நான் 2007-ம் ஆண்டு யு-16 அணி​யில் விளை​யாடத் தொடங்​கினேன். எந்த அணி​களும் கைகுலுக்​காமல் இருந்​ததை நான் பார்த்​த​தில்​லை. இந்​தி​யா-​பாகிஸ்​தான் உறவு​கள் மோச​மாக இருந்​த​போதும், நாங்​கள் கைகுலுக்​கினோம். வெளி​யில் நடக்​கும் விஷ​யங்​களை நம்​மால் கட்​டுப்​படுத்த முடி​யாது. கட்​டுப்​படுத்​தக்​கூடிய​வற்றை நம்​மால் கட்டுப்​படுத்த முடி​யும். அது​ என்னவென்றால், ஆசி​யக் கோப்​பையை வெல்வதுதான்” என்​றார்.

8 முறை சாம்பியன்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது. பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

‘இருக்கையின் விளிம்பில்’ - இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறும்போது, “ஷாகின் ஷா அப்ரிடி ஆக்ரோஷமான பந்து வீச்சாளர், அவர் ஒவ்வொரு வாய்ப்பிலும் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பார். அதேவேளையில் அபிஷேக் சர்மா பின்வாங்கப் போவதில்லை. இதுவரை, இந்த இருவரும் நேருக்குநேர் மோதிய ஒவ்வொரு முறையும், கிரிக்கெட் ஆதரவாளர்களாகவும் ரசிகர்களாகவும் நாம் அனைவரும் இருக்கையின் விளிம்பில் இருக்கிறோம், அது ஆட்டத்துக்கு மிகவும் நல்லது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x